சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா நளினியும் முருகனும் பேச போகிறார்கள் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி

முருகனின் தந்தை இறப்பு குறித்து தான் இருவரும் பேச போகிறார்களே தவிர அமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா நளினியும் முருகனும் பேச போகிறார்கள் என்று ஹைகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியும் முருகனும் அவர்களது உறவினர்களிடம் தந்தையின் இறப்பு குறித்து தான் பேச போகிறார்களே தவிர அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா பேச போகிறார்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி மற்றும் முருகன் ஆகியோரை லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயுடனும் வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் பேச அனுமதி கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Nalini and Murugan are going to talk about the US election - High Court question

அந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு, நளினி மற்றும் முருகன் வெளிநாட்டில் உள்ள அவர்களது உறவினர்களிடம் தந்தை இறப்பு குறித்து தான் பேச போகிறார்களே தவிர வேறு என்ன பேசப்போகிறார்கள், குடும்பத்தினருடன் காணொளி மூலம் பேச அனுமதிப்பதில் என்ன பாதுகாப்பு குறை?" என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன், வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் இருவரையும் பேச அனுமதித்தால், ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் பன்முக விசாரணை முகமையின் விசாரணை பாதிக்கும் என தெரிவித்தார்.

கிரானைட் அரசுடமையாக்கக் கோரிய வழக்கில் பிஆர் பழனிச்சாமி விடுதலை ரத்து - மதுரை ஹைகோர்ட் கிளைகிரானைட் அரசுடமையாக்கக் கோரிய வழக்கில் பிஆர் பழனிச்சாமி விடுதலை ரத்து - மதுரை ஹைகோர்ட் கிளை

இதை ஏற்க மறுத்த நீதிபதி கிருபாகரன், முருகனின் தந்தை இறப்பு குறித்து தான் இருவரும் பேச போகிறார்களே தவிர அமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா பேச போகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

மேலும், இருபது ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2015 ஆம் ஆண்டு வரை மட்டுமே அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை தற்போதும் செயல்பாட்டில் உள்ளதா? அல்லது விசாரணைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

English summary
Nalini and Murugan, who are in jail in connection with the assassination of former Prime Minister Rajiv Gandhi, are going to talk to their relatives about their father's death, but not about the US presidential election? As questioned by the judge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X