சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழில் கோஷமும்.. தலையாய வேஷமும்.. திமுகவை கடுமையாக விமர்சித்து 'நமது அம்மா' பதிலடி

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழ் வாழ்க! தமிழக எம்.பிக்கள் லோக்சபாவில் தாய் மொழியில் பதவியேற்பு- வீடியோ

    சென்னை: தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க என திமுக எம்பிக்கள் பதவியேற்பு அன்று கோஷம் எழுப்பி அதிரவைத்தனர். அப்போது அதிமுக எம்பி ரவிந்திரநாத் ஜெய்ஹிந்த் என்று சொன்னார். இதனை இந்தி என்ற குறுகிய வட்டத்தில் கொச்சைப்படுத்தியதாக கூறி திமுகவை விமர்சித்து பதிலடி கொடுத்துள்ளது நமது அம்மா நாளிதழ். தமிழில் கோஷம் என்பது தலையாய வேஷம் என திமுகவை விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது.

    லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற திமுக காங்கிரஸ் கூட்டணி எம்பிக்கள் கடந்த செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் எம்பிக்களாக பதவியேற்றனர். அப்போது அவர்கள் அனைவரும் தமிழில் பதவியேற்றதுடன் தமிழ் வாழ்க என கோஷம் எழுப்பினர்.அதிமுக சார்பில் எம்பியாக வெற்றி பெற்ற ரவீந்திரநாத் தமிழில் எம்பியாக பதவியேற்ற போதிலும் அவர் புரட்சி தலைவர் வாழ்க, புரட்சி தலைவி வாழ்க, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என்று முழக்கமிட்டார். திமுகவினரின் முழகத்தின் போது பாரத் மாதா கி ஜே என பதில் முழக்கம் இட்ட பாஜக எம்பிக்கள், ரவீந்திராத் ஜெய்ஹிந்த் வந்தே மாதரம் என்று சொன்ன போது கைதட்டி பாராட்டினார்.

    இந்நிலையில் ரவீந்திரநாத் ஜெய்ஹிந்த் என்று சொன்னதை இந்தி என்ற குறுகிய வட்டத்தில் அடைத்து திமுக கொச்சைப்படுத்தி உள்ளதாக கூறி நமது அம்மா பதிலடி கொடுத்துள்ளது.

    இதுதான் கடைசி நொடி.. தாய்க்கும் தெரியாது.. அந்த மகளுக்கும் தெரியாது.. உறைய வைக்கும் சிசிடிவி காட்சி!இதுதான் கடைசி நொடி.. தாய்க்கும் தெரியாது.. அந்த மகளுக்கும் தெரியாது.. உறைய வைக்கும் சிசிடிவி காட்சி!

    ரெட் ஜெயிண்ட் மூவிஸ்

    ரெட் ஜெயிண்ட் மூவிஸ்

    நமது அம்மா இன்று வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: "வா குவாட்டர் கட்டிங், ரெட் ஜெயிண்ட் மூவிஸ், கிளவுட் நைன், தி ரைசிங் சன் என்றெல்லாம் வெள்ளைக்கார மொழியில் படம் எடுத்து பத்திரிக்கையும் நடத்தும் வெள்ளைக்கார கம்பெனி எதோ ஒட்டுமொத்த தமிழுக்கு ஒப்பந்ததாரர்கள் போல் ஊளையிடுகிறது.

    ஆங்கிலத்தில் கையெழுத்து

    ஆங்கிலத்தில் கையெழுத்து

    ஏதோ இவர்கள் தான் முதன் முதலில் தமிழில் பதவியேற்று உறுதி மொழி மேற்கொண்ட புரட்சியாளர்கள் போல் தங்களை காட்டிக் கொண்டு ஊடக கூலிகளை வைத்து ஓர் உண்மைக்கு மாறான மாயையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். புரட்சி தலைவி ஜெயலலிதா தனது 40 வயதில் மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் தான் பதிவயேற்றார் என்பதை நாடறியும். திமுக எம்பிக்கள் தமிழ் வாழ்க என்று கோஷிமிட்டுவிட்டு கையெழுத்து போட்டதோ ஆங்கிலத்தில் என்பதுதான் கூடுதல் தகவல்

    நேதாஜியின் கோஷம்

    நேதாஜியின் கோஷம்

    சரி அது போகட்டும் கூடவே தேனி எம்பி ரவீந்திரநாத்குமார் கம்பீர மிடுக்கோடு அன்னை தமிழில் பதிவியேற்ற பின்னர். புரட்சி தலைவர் மற்றும் புரட்சி தலைவிக்கு நன்றி சொல்லிவிட்டு ஜெய்ஹிந்த் என்று உரக்க சொன்னதை குறிப்பிட்டு, அவர் இந்தியில் கோஷமிட்டார் என்பதற்காக உள்நோக்க கும்பல் ஒன்று ஊளையிட்டு அலைகிறது. இந்த தேசத்திற்கு விடுதலை பெற வேண்டும் என இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விடுதலை வேட்கையைவேகப்படுத்த ஒப்பில்லா திருவார்த்தை தான் ஜெய்ஹிந்த் என்பது. அதனை இந்தி என்ற குறுகிய வட்டத்திற்கு சுருக்கி கொச்சை படுத்துவதும், குதர்க்கம் பேசுவது தேசத்தை நேசிக்காத விரோதிகள் செயல்.

    கடுகளவும் தவறாது

    கடுகளவும் தவறாது

    இனம், மொழி, நதி, மாநில உரிமை ஆகியவற்றில் அதிமுக இம்மி அளவும் விட்டுக் கொடுக்காது. அதேநேரத்தில் இந்திய தேசியத்தின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஒன்றுபட்டு தொண்டாற்றுவதில் கடுகளவும் தவறாது.

    தமிழில் பேசினால் அபராதம்

    தமிழில் பேசினால் அபராதம்

    தமிழ் பற்றாளர்கள் எனும் வேஷம் போடும் மு.க. ஸ்டாலினின் மகள் நடத்தும் பள்ளியில் இந்திக்குத் தான் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், மாணவர்கள் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கப்படும் என்பதையும் மறைக்க முடியாதே" என நமது அம்மா நாளிதழ் கேள்வி எழுப்பியுள்ளது.

    English summary
    namadhu amma accuses dmk make controversy over aiadmk mp raveendranath jaihind speech
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X