சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அணையப் போகும் திரியின் ஆட்டம்.. டிடிவி தினகரன் குறித்து நமது அம்மா கடும் விமர்சனம்

Google Oneindia Tamil News

சென்னை: அணைய போகும் திரியின் ஆட்டம் ஓவராக இருப்பதாக டிடிவி தினகரன் குறித்து நமது அம்மா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாளிதழில் வெளியான செய்தியில், ஆணவத்தின் உச்சியில் நின்று கொண்டு அதிமுகவை அழிப்பேன் என கொக்கரித்த ஆர்எம்.வீ எங்கே, அறந்தாங்கி இடைத்தேர்தலில் தன் உதவியாளரின் வீட்டில் அதிமுகவை வீழ்த்தியவுடன் இனி நான் தான் அண்ணா திமுக, அண்ணா திமுக தான் நான் இப்படியாக இறுமாப்பு தலைக்கு ஏற எம்பிக் குதித்த அன்றைய பலநாவுக்கரசு எங்கே?

"அடுக்குமொழி அம்மாளு" தமிழிசை வெட்கப்பட வேண்டாமா? முரசொலியில் விமர்சனம்

அகிலம் அறியும்

அகிலம் அறியும்

ஒரு தொகுதியில் வென்றதும் இனி உலக அரசியலே என் பாதத்தின் கீழ் என்று ஊளையிட்ட ஏராள அரசியல் தலைவர்களை விழுங்கி ஏப்பம் விட்ட இயக்கம் இன்று ஒன்றரை கோடி சிப்பாய்களை கொண்டு நடக்கும் அதிமுக என்பதை இந்த அகிலமே அறியும்.

இறுமாப்பு

இறுமாப்பு

அம்மாவுக்கு தெரியாமல் அம்மாவின் அரசியல் அதிகாரங்கள் முறைகேடாக பயன்படுத்தி மண்ணுளி பாம்புகள் போல் மறைந்திருந்து கொண்டு கழகத் தொண்டனின் உதிரத்தை உறிஞ்சிக் கொழுத்த மாஃபியாக்களின் தலைவன் ஒட்டுமொத்த தமிழகத்துக்கு வாக்காளர்களையும் டோக்கன்களால் விலைபேசி முடித்து விடலாம் என்ற இறுமாப்பில் அலைகிறார்.

சத்தியம்

சத்தியம்

வாத்தியார் தோற்றுவித்த இந்த வாகை பேரியக்கம் அதிகார போதையில் அலைகிற எண்ணில்லா பேர்வழிகளுக்கு ஏராளமாய் பாடம் புகட்டியிருக்கிறது. அவ்வழியியே இந்த மட்கிப் போன செல்வருக்கும் புதிய பாடத்தை மே 23-ஆம் தேதி நிச்சயமாய் புகட்டும் என்பது சத்தியம்.

பத்திரிகை

பத்திரிகை

அதுவரையில் அவர் எம்பி குதிக்கட்டும். எகத்தாளம் பேசட்டும். அதிமுக அமமுக கட்சியில் இணையும் என்ற ஆணவத்தில் குதிக்கட்டும். ஆனால் இவை யாவும் அணைய போகிறத திரியின் ஆட்டம் என்பதை அவருக்கு வாக்கு எண்ணிக்கை திருநாள் வசமாக உணர்த்தும் என்பது நிச்சயமே என்று அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Namathu Amma criticises TTV Dinakaran as he says that ADMK will join in AMMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X