• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

உச்ச நட்சத்திரம்.. உரைப்பது சத்தியம்.. நமது அம்மாவில் ரஜினிக்கு பாராட்டு

|
  Rajinikanth Pressmeet: யாரையும் பகைச்சுக்காம நாகரீகமாக ரஜினி பேட்டி- வீடியோ

  சென்னை: தேர்தல் முடிவுகள் குறித்து ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு நமது அம்மா நாளிதழ் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து நமது அம்மா நாளிதழில் "உச்ச நட்சத்திரம்.. உரைப்பது சத்தியம்.." என்ற தலைப்பில் ரஜினிகாந்த் குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

  தேர்தல் முடிவுகள் குறித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெற முடியாமல் போனதற்கு நீட், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட விவகாரங்களில் கார்பன், மீத்தேன் உள்ளிட்ட விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பிரச்சாரமே பிரதான காரணம் என்றிருக்கிறார்.

  டெல்லியில எப்படி இப்படி பறிகொடுத்தோம்.. ஆய்வு செய்ய 5 பேர் குழு அமைத்தது காங்கிரஸ்!

  வெறுப்பு

  வெறுப்பு

  மேலும் பாஜக ஆட்சிக்கு எதிராக ஒரு அலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்றும் அந்த அலைதான் தமிழகத்தின் தேர்தல் முடிவுகளை திசை மாற்றிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ள சூப்பர்ஸ்டார், "வெறுப்பு காட்டும் குழந்தையிடம் தாய் தான் காட்டும் பாசத்தை இரட்டிப்பாக்குவாள்" என்பது போல் வாக்கு எண்ணிக்கை முடிவதற்குள்ளேயே கோதாவரி, கிருஷ்ணா, காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பை புதிய பாஜக அரசு தொடங்கி இருப்பதையும் மனதார பாராட்டி, வரவேற்றும் இருக்கிறார்.

  கடும் கோபம்

  கடும் கோபம்

  ஆம் உண்மையை பேசியிருக்கிறார், உளமார பேசியிருக்கிறார். மத்திய அரசு முன்வைத்த நீட் மருத்துவக் கல்வி முறை தகுதியும், திறமையும் படைத்த மாணவர்களுக்கு வரம் என்றாலும், இதுநாள் வரை பிள்ளைகளை டாக்டராக்கிடும் கனவுகளில் மூழ்கி கிடக்கும் பெற்றோர்களிடம் இருந்து கோடி கோடியாய் கொள்ளையடித்து வந்த தனியார் மருத்துவக் கல்லூரி அதிபர்களுக்கு நீட் ஒரு பெரும் வணிக நஷ்டம் என்பதை மனதில் கொண்டு, ஊடகங்கள் அவர்கள் ஏவிவிட்ட கடுமையான விமர்சனங்களும் உள்நோக்கித்திலான பிரச்சாரமும், அடிப்படை உண்மையை மறைத்து மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் கடும் கோபத்தையும், ஆவேசத்தையும் உருவாக்கியது.

  கோபம் மட்டுமே உச்சம்

  கோபம் மட்டுமே உச்சம்

  அதற்கு இன்னொரு காரணம், நீட் தேர்வுகளில் பங்கு கொள்ள மாநில கல்வி முறையில் படித்து வந்த மாணவர்களுக்கு சிறிதுகாலம் அவகாசம் வேண்டும் என்ற தமிழகம் போன்ற ஒரு சில மாநிலங்களின் கோரிக்கை மத்திய அரசாலும், அதன் பிறகு உச்சநீதிமன்றத்தாலும் ஏற்கப்படாது போன நிலையில், நீட் கல்வி முறையால் மாணவர்களுக்கு கிடைக்கும் நியாயமான பலன்கள் முற்றிலுமாக மறைக்கப்பட்டு அதனாலான கோபம் மட்டுமே உச்சம் தொட்டது.

  ஆளும் தரப்பு

  ஆளும் தரப்பு

  அது மட்டுமின்றி இந்த நீட் கல்வி முறையை முன்னெடுத்து அன்றைய காங்கிரஸ், திமுக தலைமையிலான மத்திய கூட்டணி ஆட்சி என்பதெல்லாம் இருட்டடிப்பு செய்யப்பட்டது. தற்காலிக விலக்கு கூட தமிழகத்திற்கு தரக் கூடாது என்று நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடுத்ததே முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தான் என்கிற அப்பட்டமான உண்மை கூட அடியேடு மறைக்கப்பட்டது. இதனை தெளிவாக எடுத்து சொல்வதிலும், மத்தியில் ஆளும் தரப்பு தவறிவிட்டது.

  பாஜகவின் அரசு

  பாஜகவின் அரசு

  அது போலவே, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை ஒப்பந்தம் போட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்தது அன்றைய திமுக, காங்கிரஸ் ஆட்சி தான் என்பதும் கூட மறைக்கப்பட்டது. விளைநிலங்களை பாதிக்கும் திட்டங்களை கைவிட வேண்டும் என்கிற கோரிக்கைக்கு செவி மடுப்பதிலும், இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமல்ல, இன்னும் பிற மாநிலங்களிலும் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதையெல்லாம் எடுத்துரைப்பதிலும் பாஜகவின் அரசு முழுமை பெற தவறியது.

  ஊடகங்களால்

  ஊடகங்களால்

  அதே வேளையில் ஈழத்தில் நடந்த இன அழிப்பை முன்னின்று நடத்திய காங்கிரஸ், திமுகவின் கடந்த கால இனத்துரோகங்கள், ஜல்லிக்கட்டு உரிமையை முடக்கிய அன்றைய திமுக, காங்கிரஸ் ஆட்சியின் தமிழர் விரோதபோக்கு, அத்தனையும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பாஜக ஆட்சி மீதான வெறுப்பு அரசியல் மட்டுமே தமிழகத்தில் ஊடகங்களால் உச்சத்துக்கு கொண்டு செல்லப்பட்டாது.

  எதிர்ப்பு நிலை

  எதிர்ப்பு நிலை

  இதன் விளைவுதான் ஏறத்தாழ ஒட்டுமொத்த தேசமே நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு நல்லாதரவை வாரி வழங்கியிருக்கிறபோது தமிழகத்தில் மட்டும் அது கைகூடாமல் போனதற்கு காரணமாகும். அதே வேளையில் நீர் நிலைகளை தூர்வாரியது. நீராபானம் கொண்டு வந்தது, குடிமராமத்து பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றி நடத்தியது, அரை நூற்றாண்டு கனவான அத்திக்கடவு- அவிநாசி திட்டத்திற்கு உத்வேகம் கொடுத்தது, கால்நடைரளை அழிக்கும்... கால்வாய்களை அடைக்கும், புற்றுநோயை பரப்பும் ஒட்டுமொத்த பூமியையே மலடாக்கும் பிளாஸ்டிக் அரக்கனுக்கு முற்று வைத்து சுற்றுச்சூழல் காத்தது... ஒகி புயல், கஜா புயல் உள்ளிட்ட இயற்கை தந்த பேரிடர்களை இமை துஞ்சாத மீட்பு பணிகளால் வென்றெடுத்தது என அம்மாவின் மறைவிற்கு பிறகு தொடர்ந்து இந்த இரண்டாண்டு கால இபிஎஸ், ஓபிஎஸ் இணைகரத்து நல்லாட்சி மேற்கொண்டு வந்த பெருமுயற்சிகளும் நன்நோக்கத் திட்டங்களும் ஒன்பது சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் வெற்றியை தந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நிலை அரசியல் சட்டசபை இடைத்தேர்தலிலும் கழகத்திற்கு ஓர் பின்னடைவை ஏற்படுத்தி தான் இருக்கிறது.

  உளமார்ந்த கருத்து

  உளமார்ந்த கருத்து

  மொத்தத்தில் எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி, நல்நோக்கத்திலான திட்டங்களை கூட, கோப கண்கொண்டு பார்க்க வைத்துவிட்டது. காலத்தே கூட்டணி அமைத்து எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை மூர்க்கத்தோடு முறியடிப்பதில் பின்தங்கி விட்டோம் என்பதையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உளமார்ந்த கருத்து உணர்த்துகிறது.

  உச்சநட்சத்திரத்தின் கருத்து

  உச்சநட்சத்திரத்தின் கருத்து

  அதே வேளையில் இந்திய தேசத்திற்கு பிரதமர் நேரு, அன்னை இந்திரா, அமரர் ராஜீவ்காந்தி, அடல் பிகார் வாஜ்பாய் ஆகியோரது வழியில் ஒரு திடமான பிரதமராக இந்த நாடு நரேந்திர மோடி அவர்களை பெரும்பான்மை பலம் தந்து ஒப்புக் கொண்டிருக்கிறது என்பதையும் உச்சநட்சத்திரத்தின் கருத்து ஓங்கி உரைத்திருக்கிறது.

  அல்லதை தவிர்ப்போம்

  அல்லதை தவிர்ப்போம்

  நல்லதை ஏற்போம், அல்லதை தவிர்ப்போம். உள்நோக்கமற்ற காலாவின் கருத்தை உள்வாங்கிக் கொள்வோம், குறைகளையும் நிறைகளாக்கி 2021-லும் கழகமே தமிழகத்தை ஆளும் என்ற நம் கருணைத் தாயின் கடைசி சூளுரையை சாத்தியமாக்கிட கண்துஞ்சாது, பசி நோக்காது உழைப்போம்.

  இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

  கெடுப்பாரி லானுங் கெடும்- எனும் வள்ளுவன் மொழியை வழித்தடமாக்கி வரும் காலத்தில் வழியெங்கும் வாகைத் தோரணம் அமைப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

   
   
   
  English summary
  Namadhu Amma praises Rajinikanth for welcoming BJP government and big success for Modi.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X