சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போ... போ... வீட்ல யாராவது பெரியவங்க இருந்தா வரச்சொல்லு.. ஹிஹிஹி..!

விஷாலுக்கு நமது அம்மா நாளிதழ் கண்டனம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    விஷாலையும் விட்டு வைக்காத நமது அம்மா நாளிதழ்- வீடியோ

    சென்னை: கமல், ரஜினி, டிடிவி என எல்லோரையும் போட்டு தாக்கிய அம்மா நாளிதழ் இப்போது விஷாலையும் விட்டு வைக்கவில்லை.

    விஷாலுக்கும் அதிமுக அரசுக்கும் ஆர்.கே.நகர் வேட்பு மனு தாக்கலின் போதிருந்தே முட்டல், மோதல் இருந்து வருகிறது. நேரடியாகவும், பகிரங்கமாகவும் இந்த மோதல் இல்லாவிட்டாலும் பனிப்போராகவே 2 வருஷங்களாக நீடித்து வருகிறது. ஆனால் நிலைமை அப்படி கிடையாது.

    ஆளும் கட்சி தனக்கென்று ஒரு செய்தி சேனலை நியூஸ் ஜெ என்ற பெயரில் தொடங்கியது. இந்த விஷயத்தை யாருமே பெரிதாக பேசப்படவில்லை. காரணம் பெரும்பாலான கட்சிகள் தங்களுக்கென்று ஒரு சேனலை சொந்தமாக நடத்தி கொண்டிருப்பதுதான். ஆனால் விஷால் இது சம்பந்தமாக ஒரு ட்விட்டர் பதிவு போட்டார்.

    டெல்டா மாவட்டங்களுக்குப் படையெடுங்கள் மக்களே.. உங்களின் உதவி அம்மக்களுக்கு அதிகம் தேவை டெல்டா மாவட்டங்களுக்குப் படையெடுங்கள் மக்களே.. உங்களின் உதவி அம்மக்களுக்கு அதிகம் தேவை

     வியாபார அமைப்பு

    வியாபார அமைப்பு

    அதில், "மற்றுமொரு செய்தி சேனல் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் மாதச்சம்பளம் வாங்கும் எம்எல்ஏ., எம்.பி.க்கள் எப்படி இதுபோன்ற ஒரு வியாபார அமைப்பை தொடங்க முடிகிறது? 2019-ம் ஆண்டுக்காக காத்திருக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார். இந்த பதிவு இணையத்தில் பெரும் வைரலாகவும் போய்விட்டது.

     நான் வரி கட்டறேன்

    நான் வரி கட்டறேன்

    இப்படி விஷால் கேட்ட கேள்வி நிறைய பேருக்கு பிடிக்கவே இல்லை. அது ஏன் அதிமுகவினரை மட்டும் விஷால் சீண்ட வேண்டும், எத்தனை பேர் கட்சிக்காக சேனல் வைத்திருக்கிறார்களே, அங்கெல்லாம் விஷால் கணக்கு கேட்க வேண்டியதுதானே? என்று கண்டனங்களை பதிவிட்டார்கள். அதற்கு விஷால், நான் கவர்ன்மெண்ட்டுக்கு வரி கட்டறேன், அதனால கேக்கறேன், எங்கிருந்து சேனல் ஆரம்பிக்க பணம் வருகிறது?" என்று திரும்பவும் கேட்கவும் அதிமுக தரப்புக்கு கோபம் வந்துவிட்டது.

     காழ்ப்புணர்ச்சி பேசுகிறது

    காழ்ப்புணர்ச்சி பேசுகிறது

    இதற்கு தனது கண்டனத்தை நமது அம்மா நாளிதழில் தெரிவித்துள்ள உள்ளது. அதில் உள்ளதாவது: ‘நியூஸ் ஜெ' தமிழ்ச் செய்தி தொலைக்காட்சிக்கு உலகெங்கும் இருந்து வாழ்த்துக்கள் குவிகிற வேளையில், ஒரு ‘வி‌ஷமப்பயல்' மட்டும் வாழ்த்துக்கு பதிலாக வன்மத்தை கக்குகிறது. காசு ஏது என்று காழ்ப்புணர்ச்சி பேசுகிறது.

     மாபியா தலைவன்

    மாபியா தலைவன்

    இப்ப மட்டுமா?... வெகு நாளாகவே குறிப்பாக அம்மாவின் மறைவுக்குப் பிறகு துரோகியின் தூண்டுதலின் பேரில், கழகத்தை தொடர்ந்து பழிக்கிற துஷ்டனாகிவிட்ட "அந்த தோல்விப்பட நடிகர்" கணக்கு கேட்க வேண்டிய இடம், "63 லட்சம் ரூபாய் சொத்து கணக்கு காட்டிவிட்டு, தொலைக்காட்சி, பத்திரிகை நடத்துவதோடு, டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றியும், ஊரெங்கும் கூட்டம் நடத்துகிறேன் என்று மாதம் 10 கோடி ரூபாயை செலவு செய்யும் அந்த மாபியா தலைவனிடம் தானே..."

     இது வெட்கக்கேடு

    இது வெட்கக்கேடு

    அதைவிடுத்து, ஏறத்தாழ 2 கோடி தொண்டர்களை கொண்ட இமயப் பேரியக்கத்திடம்... ஆறாம் முறையாய் தமிழகத்தை ஆட்சி செய்யும் கழகத்திடம்... தொலைக்காட்சி தொடங்க பணம் ஏது என்று டுவிட்டரிலே, பதிவு போட்டு தனது நமைச்சலை வெளிப்படுத்துவது வெட்கக்கேடல்லவா?...

     கொலை வெறியில தேடுது

    கொலை வெறியில தேடுது

    சரி அதெல்லாம் போகட்டும்... நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து 7 கோடி ரூபாயை காணோம்னு கோடம்பாக்கமே உன்னை கொலை வெறியில் தேடுகிறபோது, உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை... போ... போ... வீட்ல யாராவது பெரியவங்க இருந்தா வரச்சொல்லு.... ஹி... ஹி... ஹி...!"

    இவ்வாறு அந்த கண்டனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Namathu Amma Newspaper criticize Actor Vishal
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X