சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக பாஜக சார்பில் பட்டிதொட்டியெங்கும் 'நம்ம ஊரு பொங்கல்'... எல்.முருகன் அறிவிப்பு..!

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் நம்ம ஊரு பொங்கல் விழா கொண்டாடப்படும் என அக்கட்சியின் தமிழகத் தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.

ஜனவரி 9 மற்றும் 10-ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் பாஜகவினர் இந்த விழாவினை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் நம்ம ஊரு பொங்கல் விழாவை கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Namma ooru Pongal celebrate on behalf of the Tamil Nadu BJP

அதன் படி ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை 9-ம் தேதி நம்ம ஊரு பொங்கல் விழாக்களில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பங்கேற்கிறார். இதேபோல் 10-ம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் பாஜக மேலிட தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி பங்கேற்கிறார்.

எனது முடிவு அப்படியும் இருக்கலாம்... இப்படியும் இருக்கலாம்... எதற்கும் தயாராக இருங்க -மு.க.அழகிரிஎனது முடிவு அப்படியும் இருக்கலாம்... இப்படியும் இருக்கலாம்... எதற்கும் தயாராக இருங்க -மு.க.அழகிரி

அவர்களை போல் தமிழகம் முழுவதுமே பாஜக முக்கிய நிர்வாகிகள் பலர் நம்ம ஊரு பொங்கல் விழாக்களில் கலந்துகொள்கின்றனர். கிராமம் வாரியாக திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடந்து வரும் சூழலில் கிராமம் வாரியாக பொங்கல் விழாவை பாஜக முன்னெடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே திமுக கூட்டணி உடைந்துவிட்டதாகவும் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் எனவும் கூறியுள்ளார். மதிமுக மற்றும் விசிக தனிச் சின்னத்தில் போட்டி என அறிவித்ததை தொடர்ந்து கூட்டணி உடைந்துவிட்டதாக எல்.முருகன் கூறியிருக்கிறார்.

English summary
Namma ooru Pongal celebrate on behalf of the Tamil Nadu BJP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X