சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் பேசாமல் சீனாவுக்கே போய்விடலாம்.. பிரதமர் மோடியால் சுப்பிரமணியன் சுவாமி விரக்தி

Google Oneindia Tamil News

டெல்லி: பா.ஜ.க மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் மோடி பொருளதாரம் தொடர்பான ஆலோசனை கேட்க மறுப்பதால் பேசாமல் சீனாவுக்கு போய்விடலாம் என நினைப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி. அவர் தமிழகம் குறித்து தெரிவித்த பல கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

இதேபோல் ராமர் கோவில் விவாகரம் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு அடிக்கடி பல்வேறு ஆலோசனைகளை சுப்பிரமணியன் சுவாமி வழங்கி வருகிறார்.

மோடி மதிப்பதில்லை

மோடி மதிப்பதில்லை

ஆனால் இவரது ஆலோசனைகளை பிரதமர் மோடி மதிப்பதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி பொருளாதாரம் குறித்த தனது ஆலோசனை கேட்க மறுப்பதாக சுப்பிரமணியன் சுவாமியே வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

மோடி கேட்கவில்லை

இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, "மோடி என் ஆலோசனைகளைக் கேட்காத நிலையில் இங்கு இருப்பதற்குப் பதிலாக சீனாவுக்குப் போய்விடலாம் என நினைக்கிறேன்" என கூறியுள்ளார்.

பொருளாதார அறிஞர்கள்

பொருளாதார அறிஞர்கள்

"சீனாவின் புகழ்பெற்ற சிங்குவா பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் மாதம் ‘சீனாவின் பொருளாதார மேம்பாடு: கடந்த 70 ஆண்டுகளின் மதிப்பாய்வு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற உள்ளது. அதில் ஏராளமான பொருளாதார அறிஞர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்ம் அதில் உரையாற்றுவதற்கு என்னை அழைத்துள்ளார்கள்,

சீனாவுக்கு போகிறேன்

சீனாவுக்கு போகிறேன்

ஆனால், பொருளாதாரம் தொடர்பான எனது ஆலோசனைகளை பிரதமர் நரேந்திர மோடி கேட்கத் தயாராக இல்லை. நான் பேசாமல் சீனாவுக்கே போய்விடலாம்" இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி வேதனை தெரிவித்துள்ளார்.

English summary
Subramanian Swamy said that 'Namo is not interested in knowing my views I might as well go to China'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X