சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நண்டு" நர்மதாவுக்கு வந்த அசிங்கமான கடிதம்.. லெட்டர் பூராவும் ஆபாசம்.. போலீஸில் புகார்!

நண்டு நர்மதாவுக்கு ஆபாச லெட்டர் வந்ததாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: அசிங்க அசிங்கமா எழுதி நர்மதாவுக்கு ஒரு லெட்டர் வந்ததாம்.. அண்ணாநகர் நண்டு நர்மதாவுக்கு ஆபாச லெட்டர் எழுதியது யார் என்று தெரியவில்லை!

ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் நர்மதா.. 38 வயசாகிறது.. சென்னை அண்ணா நகரில் வசிக்கிறார்.. இவர் ஒரு சமூக ஆர்வலர்.. இவர் முன்னெடுத்துச் செல்லும் போராட்டங்கள் எல்லாமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

Nandu Narmatha gets obscene letter

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேலுவுக்கு 2 வருஷங்கள் பணி நீடிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருத்தணி முருகன் கோவிலில், காவடி எடுத்தார்.. அச்சு அசல் பொன் மாணிக்கவேல் போலவே கெட்டப் போட்டு இந்த காவடியை எடுத்தார்.. இதற்கு பிறகு, ஹைகோர்ட், சிறப்பு அதிகாரியாக அவரை நியமனம் செய்திருப்பதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்று பழனியிலும் அதே வேடத்தில் போராட்டம் நடத்தினார்.

இப்படித்தான் சில மாதங்களுக்கு முன் அமைச்சரின் வீட்டுக்குள் நண்டு விடும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார். அதிலிருந்து இவர் பெயர் "நண்டு நர்மதா" என்றாகிவிட்டது.. அதேபோல 10 நாளைக்கு முன்பு, கோயம்பேட்டில் உள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வீட்டின் முன்பும் கட்சி கொடியை தூக்கில் தொங்கவிடும் போராட்டத்திலும் ஈடுபட்டு கைதானார்.

இந்த போராட்டம் எல்லாமே இவர் தன்னிச்சையாகவே செய்வதாகும்.. யார் தூண்டுதலும் கிடையாது.. கடந்த மாதம் 29-ம் தேதி அண்ணா நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காததாலும் அதை கண்டிக்கும் விதமாக நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார், நர்மதாவை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, அண்ணாநகர் போலீசாரை கிண்டலடித்து சோஷியல் மீடியாவில் ஒரு வீடியோ வெளியானது.. பின்னர் நர்மதாமீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.. இந்நிலையில், இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.. நர்மதா வீட்டுக்கு நேற்று ஒரு லட்டர் வந்ததாம்.. அதில், ஆபாச வார்த்தைகளால் திட்டியும், அவரை மிரட்டியும் எழுதப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.. இதை எழுதியது யார் என்று தெரியவில்லை.. ஆனால் கடிதத்தை பார்த்து, நர்மதா அதிர்ச்சியடைந்துள்ளாராம்!

English summary
Annanagar Social Activist Nandu Narmatha protest case issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X