சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோடீஸ்வரர் ரூபி மனோகரன்... சோனியாவையே வியக்க வைத்த உறுதி...!

Google Oneindia Tamil News

Recommended Video

    Nanguneri byelection : கோடீஸ்வரர் ரூபி மனோகரன்..சோனியாவையே வியக்க வைத்த உறுதி.!-வீடியோ

    சென்னை: நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் காணும் ரூபி மனோகரன் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு கடும் போட்டியாக திகழ்கிறாராம்.

    ரூபி மனோகரனை பொறுத்தவரை சென்னை மற்றும் அதன் புறநகர்களில் கட்டுமான தொழிலில் ஒரு சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார்.

    பணத்தை பற்றி கவலைப்படவேண்டாம், கட்சியும் நிதி தர வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என அவர் அளித்த உறுதிதான் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியையே வியப்படைய செய்துள்ளது.

    பாஜக பிளான்.. ரஜினிக்கு ஆப்பு.. தினகரனுக்கு டெல்லி.. வருகிறார் சசிகலா.. கை கோர்க்கும் அமமுக, அதிமுகபாஜக பிளான்.. ரஜினிக்கு ஆப்பு.. தினகரனுக்கு டெல்லி.. வருகிறார் சசிகலா.. கை கோர்க்கும் அமமுக, அதிமுக

    அரசியல் ஆசை

    அரசியல் ஆசை

    கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காட்டை சேர்ந்த ரூபி மனோகரன் கல்லூரி படிப்பை முடித்த கையுடன் இந்திய விமானப் படையில் சேர்கிறார். அதிகாரியாக அங்கு சிறிது காலம் பணியாற்றிய அவர் இளம் வயது முதலே கொண்டிருந்த அரசியல் வேட்கை காரணமாக காங்கிரஸில் அடிப்படை உறுப்பினரானார். மேலும், 1995 காலகட்டங்களில் சென்னை தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி அதனை விற்பனை செய்யும் கட்டுமான நிறுவனத்தை தொடங்குகிறார்.

    கோடி கோடியாக

    கோடி கோடியாக

    கட்டுமான நிறுவனம் மூலம் எதிர்பார்க்காத வருவாய் கிடைத்ததை அடுத்து அந்ததுறையில் தீவிர கவனம் செலுத்தி புதிய டிசைன்களில் வீடுகளை வடிவமைத்து, தனது மனைவி பெயரான ரூபி என்பதை கட்டுமான நிறுவனத்துக்கு பெயராக சூட்டினார் மனோகரன். நாளடைவில் ''ரூபி பில்டர்ஸ்'' என்பது சென்னை மக்களிடையே நம்பிக்கைக்குரிய பிராண்டாக மாறியது. பணம் கோடிகோடியாக கொட்டத் தொடங்கியது. இதுமட்டுமல்லாமல் ரூபி திருச்சி வாரியர்ஸ் என்ற கிரிக்கெட் அணியின் உரிமையாளரும் கூட.

    வாரி இறைப்பு

    வாரி இறைப்பு

    தொழிலுக்கு எந்தளவு முக்கியத்துவம் தருவாரோ அதைவிட ஒரு பங்கு அதிகமாகவே கட்சிப்பணிக்கு முக்கியத்துவம் அளித்து வந்தார். காங்கிரஸ் பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் என எதுவாக இருந்தாலும் கேட்காமலேயே நிதியை வாரி வழங்குவது ரூபி மனோகரனின் வழக்கம். பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மனம் குளிரும் வகையில் அவரது செயல்பாடுகள் இருக்கும்.

    பலன்

    பலன்

    இந்நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியை கேட்டு போராடினார் ரூபி மனோகரன். ஆனால் அதை வசந்த்குமாருக்கு அளித்தார் அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல். இதனிடையே நாங்குநேரி இடைத்தேர்தலில் சீட் வாங்குவதற்கான முயற்சியை கடந்த இரண்டு மாதங்களாக அவர் மேற்கொண்டதற்கு பலனாக இப்போது சீட் கிடைத்துள்ளது.

    வேட்பாளர்

    வேட்பாளர்

    இதனிடையே மூன்று பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை ஆராய்ந்த அவர் ஊர்வசி அமிர்தராஜுக்கு வயதிருக்கிறது, அதனால் அடுத்தமுறை வாய்ப்பு தரலாம் என்றுள்ளார். குமரி அனந்தன் வயது மூப்பு காரணமாக அவரை நிறுத்தி அலைக்கழிக்க வேண்டாம் எனக் கருதினாராம். பின்னர் தான் ரூபி மனோகரன் பெயர் இறுதியாக டிக் அடிக்கப்பட்டதாம்.

    கவலை வேண்டாம்

    கவலை வேண்டாம்

    தனது பெயர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் ரூபி மனோகரன் ஒரு உறுதியை அளித்தாராம். அதாவது தேர்தல் செலவை பற்றி கவலைப்படவேண்டாம், கட்சியும் நிதி தர வேண்டாம் என்பது தானாம் அது. இந்தத் தகவல் கே.சி. வேணுகோபால் மூலம் சோனியாவுக்கு செல்ல, கட்சி சோதனையான காலத்தில் உள்ள நிலையில் கூட சொந்தநிதியை செலவழிக்க தயாராக உள்ளாரா எனக் கேட்டு வியப்படைந்தாராம்.

    English summary
    nanguneri byelection congress candidate ruby manohran background
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X