சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விக்கிரவாண்டி நாங்குநேரியில் நாம் தமிழர் கட்சியின் பரிதாப நிலை.. வீழ்ச்சிக்கு காரணம் என்ன

Google Oneindia Tamil News

Recommended Video

    TamilNadu By election 2019 | விக்கிரவாண்டி, நாங்குநேரியில் நாம் தமிழர் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

    சென்னை: தேர்தலில் ஜெயிப்பது தோற்பது என்பது இரண்டாவது விஷயம் இங்கு களத்தில் நிற்க வேண்டும். அதுதான் மிக முக்கியம். அதை எப்போதும் செய்துவரும் கட்சி நாம் தமிழர் கட்சி.

    அந்த கட்சி கடந்த சட்டமன்ற இடைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று அசத்தியது.

    இந்நிலையில் இந்த முறையும் நாம் தமிழர் கட்சி விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் களம் இறங்கியது. விக்கிரவாண்டியில் கந்தசாமி என்பவரும், நாங்குநேரியில் ராஜநாராயணன் என்பவரும் போட்டியிட்டனர்.

    அதிமுகவில் சசிகலா சேர்க்கப்படுவாரா?.. வாக்கு எண்ணிக்கை நாளில் ஓ.பி.எஸ் சொன்ன அதிரடி பதில்!அதிமுகவில் சசிகலா சேர்க்கப்படுவாரா?.. வாக்கு எண்ணிக்கை நாளில் ஓ.பி.எஸ் சொன்ன அதிரடி பதில்!

    2913 வாக்குகள்

    2913 வாக்குகள்

    விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 113428 பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் நா.புகழேந்தி 68 ஆயிரத்து 426 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இங்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி 2913 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

    3228 வாக்குகள்

    3228 வாக்குகள்

    இதேபோல் நாங்குநேரியில் சற்று முன் நிலவரப்படி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 94562 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 62229 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இங்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன் 3228 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

    நாம் தமிழர் கட்சி

    நாம் தமிழர் கட்சி

    கடந்த முறை நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடாத நிலையில் அதிமுக, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு போட்டியாக நாம் தமிழர் கட்சி மட்டுமே களம் இறங்கியது. ஆனால் இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. எனினும் மற்ற கட்சிகளைப் போல் தேர்தலில் களம் இறங்காமல் ஒதுங்கிய நிலையில் நாம் தமிழர் கட்சி வருவது வரட்டும் என களம் இறங்கியதை பாராட்டித்தான் ஆக வேண்டும்.

    வாக்குகள் சரிவு

    வாக்குகள் சரிவு

    சீமான் இந்த முறை தனது தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ் காந்தி மரணம் குறித்து பேசியது சர்ச்சையை ஏறபடுத்தி இருந்தது. இந்நிலையில் வாக்கு முடிவுகள் சீமானுக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. வாக்குகளும் குறைவாக கிடைக்க இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

    English summary
    Nanguneri, Vikravandi By Election Results 2019 LIVE: naam tamilar candidates did not get welcome from voters
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X