சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ன இருந்தாலும் பாசம் விட்டு போகுமா.. வைகோவுக்கு தமிழர்கள் விழா எடுக்க வேண்டும்.. நாஞ்சில் சம்பத்

வைகோவுக்கு பாராட்டு விழா எடுக்க வேண்டும்.. நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    வைகோவை திடீரென பாராட்டிய நாஞ்சில் சம்பத்- வீடியோ

    சென்னை: என்ன இருந்தாலும் பழைய தலைவர் பாசம் விட்டுபோகுமா? அதான் வைகோவுக்கு தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு விழா எடுக்க வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஆரம்ப காலங்களில் மதிமுகவின் கொள்கை பரப்பு செயலராக இருந்தவர் நாஞ்சில் சம்பத். மிகச்சிறந்த பேச்சாளர். அவர் எந்த மேடையில் பேசினாலும் கூட்டங்கள் குவியும். மதிமுகவுக்கு வைகோ எப்படி பீரங்கி பேச்சாளரோ அதே அளவுக்குதான் நாஞ்சில் சம்பத்தும் பெயர் வாங்கினார்.

    ஆனால், கட்சி பணத்தை எடுத்து சம்பத் வீடு கட்டிக் கொண்டார் என்பது முதல் மதிமுகவினர் குற்றஞ்சாட்ட, அங்கிருந்து நேராக ஜெயலலிதாவிடம் 2012ல், இணைந்து கொண்டார்.

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    அதற்கு பரிசாக ஒரு அழகிய இனோவா கார் ஒன்று கிடைத்தது. இதையடுத்துதான், சம்பத்தை சீரியஸாக பார்த்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் மீம்ஸ்களை போட்டு தெறிக்க விட்டார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின் அமமுகவில் இணைந்தார். ஆனால் அங்கு எதிர்பார்த்த மரியாதை கிடைக்கவில்லை, கூடவே கருத்து வேறுபாடும். அதனால் கொஞ்ச காலம் ஒதுங்கியே இருந்தார் நாஞ்சில் சம்பத்.

    ஸ்டெர்லைட்

    இந்நிலையில், திடீரென தம் பழைய தலைவர் வைகோவை 2 ட்வீட்கள் போட்டு இஷ்டத்துக்கு புகழ்ந்து தள்ளி உள்ளார். அந்த ட்வீட்டில், நாசகார sterlite நச்சாலையை மூட உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நியாய தீர்ப்பிற்கு பின்னால் வைகோவின் விஸ்வரூபம் தெரிகிறது. உலக அரங்கிலும், மக்கள் மன்றத்திலும், நீதி மன்றத்திலும் 22 ஆண்டுகாலம் போராடி சூழலியலை காத்த முதல் தலைவன் வைகோ." என்று பதிவிட்டுள்ளார்.

    பாராட்டு விழா

    மற்றொன்றில், "தமிழர்களுக்கு மட்டுமல்ல சூழலியலை பற்றி கவலைப்படுகிறவர்கள் உலகில் எங்கிருந்தாலும் அவர்களும் கொண்டாடுகின்ற தலைவர் வைகோ. பணம் பாதாளம் வரை பாயாது என்பதை சரித்திரத்தின் பக்கத்தில் தன்னுடைய சாதுரியத்தால் சாணக்யத்தால் நிரூபித்த தலைவன் வைகோவிற்கு தமிழர்கள் விழா எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    விமர்சிக்காத வைகோ

    விமர்சிக்காத வைகோ

    இதன்மூலம் நாஞ்சில் சம்பத் திரும்பவும் மதிமுகவுக்கே வரப்போகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வேறு எந்த கட்சிக்கும் போக முடியாத சூழ்நிலையும் அவருக்கு ஏற்பட்டிருப்பதாகவே தெரிகிறது. ஆனால் இதற்கு வைகோ என்ன சொல்ல போகிறார் என்பது வேறு விஷயமாக இருந்தாலும், அதிமுகவில் இருக்கும்போது அதாவது ஜெயலலிதா ஆதரவு இருக்கும் தைரியத்தில் வைகோவை அன்று கன்னாபின்னாவென்று பேசியவர் சம்பத். இதில் ஆச்சரியம் என்னவென்றால், பிரதமர் உட்பட யாராக இருந்தாலும் கடிவாளம் இல்லாமல் கன்னாபின்னாவென்று பேசும் வைகோ, இதுவரை சம்பத்தை ஒரு வார்த்தைகூட விமர்சித்ததே இல்லை.

    English summary
    Nanjil Sampath Praised Vaiko and he is going to rejoin MDMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X