சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாஞ்சில் சம்பத் இப்படியா பேசுவது.. பட்டுன்னு இப்படி சொல்லிட்டாரே... ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: நக்குற நாய்க்கு செக்கு எது, சிவலிங்கம் எதுன்னு தெரியவா போகுது என நடிகர் ரஜினிகாந்தை நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் ரசிகர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர் தெரிவித்த கருத்துகள் திராவிட இயக்க தலைவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணியில் ராமர், சீதை சிலைகள் நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்டதாகவும் அவற்றுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாகவும் அதை துணிச்சலாக படமெடுத்து தனது துக்ளக்கில் வெளியிட்டவர் சோ என்றும் பேசியிருந்தார்.

ராமர், சீதை சிலைகள் கொண்டு போனது உண்மை, ஆனால் அவை நிர்வாணமாகவோ செருப்பு மாலை அணிவித்தோ கொண்டு செல்லப்படவில்லை என திராவிட கட்சிகள் வாதம் செய்கின்றன. இதனால் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவை கோரி வருகின்றன.

மோசமான ட்வீட்

மோசமான ட்வீட்

ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட போவதாக அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் ரஜினியை திராவிடர் கட்சிகள் கூட விமர்சிக்காத வகையில் மிகவும் மோசமாக நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.

மமதை

மமதை

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் பெரியாரைக் கொச்சைப்படுத்தியதன் மூலம் ரஜினிகாந்தினுடைய ஆட்காட்டி அரசியல் அம்பலமாகிவிட்டது. இதற்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று சொன்னது மூலம் அவருடைய மமதையும் தமிழக மக்களுக்கு புரிந்துள்ளது.

பூமி உருண்டை

பூமி உருண்டை

தொட்டிலில் கிடந்த போதே பூமி உருண்டையைப் பற்றி கவலைப்பட்ட பெரியாரை விமர்சிப்பவர்கள் வருத்தம்
தெரிவித்தே தீரவேண்டும். வருத்தம் தெரிவிக்காவிட்டால் வருந்த வேண்டியது வரும்!

ஹிந்து குரூப்

ஹிந்து குரூப்

அவுட்லுக்குன்னு சொல்றாரு..ஹிந்து குழுமம்னு சொல்றாரு..அது சரி நக்குற நாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னு தெரியவா போகுது! என கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அவரது அரசியல் பயணம் குறித்து பலர் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

என்னதான் நாஞ்சில் சம்பத் பெரிய பேச்சாளராகவும் இலக்கியவாதியாக இருந்தாலும் கூட ஒருவரை விமர்சிக்கும் போது நாகரீகத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை கூட தெரியாமல் இருக்கிறார். ஸ்டாலினே ரஜினியிடம் கடுமை காட்டத் தயங்கிய நிலையில் இவர் இதுபோன்று கேவலமாக விமர்சித்துள்ளது திமுகவையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

English summary
Nanjil Sampath severely condemns Rajinikanth for his comment over Periyar. His fans gets angry and started trolling.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X