சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவுக்கு ஒரு இடி.. அமமுகவுக்கு ஒரு கடி.. வெறும் நாக பாம்புகள்தான்.. நாஞ்சில் சம்பத் ஓபன் அட்டாக்

அமமுகவை நாஞ்சில் சம்பத் சரமாரி விமர்சித்து பேசியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "எடப்பாடி இனிமேல் முதல்வர் ஆக போறது இல்லை" என்று அதிமுகவுக்கு ஒரு இடி.. "அமமுக கட்சி இல்லை, அது ஒரு கம்பெனி, அங்கே நாகப்பாம்புகள்தான் குடியிருக்கின்றன" என்று அங்கே ஒரு கடி.. என மாறி மாறி போட்டு தாக்கி உள்ளார் நாஞ்சில் சம்பத்.

டிடிவி தினகரன் கட்சி ஆரம்பித்ததும் முதலில் போய் தனது கனிவான ஆதரவை தெரிவித்தது நாஞ்சிலார்தான்.. பிறகு அதிருப்தியால் முதலில் கட்சியை விட்டு வெளியே வந்ததும் நாஞ்சிலார்தான்.. அதனால்தானோ என்னவோ அமமுகவை கிழித்து தொங்கவிட்டு கருத்து சொல்லி உள்ளார்.

சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசியபோது, "அமமுக என்பது கட்சி அல்ல. டிடிவி தினகரன் தலைமையில் இயங்குகிற பெரிய கம்பெனி. அவ்வளவுதான்.. அங்கே நாக பாம்புகள் தான் குடியிருக்கும். நல்லவர்கள் குடியிருக்க முடியாது. அந்த நாகப்பாம்புகள் அவரது காலை சுற்றியே கிடக்கின்றன.

அண்ணனுக்கு என்னாச்சு? நல்லா இருக்கிறாரா.. மு.க.அழகிரி ஆதரவாளர்களிடையே திடீர் பதற்றம்!அண்ணனுக்கு என்னாச்சு? நல்லா இருக்கிறாரா.. மு.க.அழகிரி ஆதரவாளர்களிடையே திடீர் பதற்றம்!

புகழேந்தி

புகழேந்தி

புகழேந்தி போன்ற நல்லவர்கள் அமமுகவில் இருந்து வெளியே வர முடிவு எடுத்தால் அவருக்கு நல்லது. அவர் கண்டிப்பாக முடிவு எடுப்பார் என்று கருதுகிறேன். இனிமேல் எடப்பாடி முதல்வர் ஆகப்போவதில்லை. அதனால், மீதி உள்ள நாட்களில் அனைத்து நாட்டிற்கும் போயிட்டு வர்றதுதான் நல்லது.

 சொட்டு நீர் பாசனம்

சொட்டு நீர் பாசனம்

நான் என்ன கேட்கிறேன்.. சொட்டு நீர் பாசனத்திற்கு உலகிலேயே தலைசிறந்த நாடு இஸ்ரேல். இதை நேரடியாக சென்று தான் பார்க்க வேண்டுமா? எதுக்கு இந்த வறட்டு சவால். வாய் வேதாந்தம்? எத்தனை நாள் இது நீடிக்க முடியும்?

வெட்கமா இருக்கு

வெட்கமா இருக்கு

மத்திய அரசாங்கத்தின் தயவில் காலம் தள்ளக்கூடிய அரசு செய்கின்ற தப்பாட்டத்தை தமிழக மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். தகவல் தொழில் நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்ட கால கட்டத்தில் அமைச்சர்கள் இதுபோன்ற நடப்பது தமிழ்நாட்டில் இருப்பதற்கே வெட்கமாக இருக்கு" என்று கூறினார் நாஞ்சில் சம்பத்.

அமமுக

அமமுக

அதிமுகவை இப்படி எதிர்ப்பது பொதுவானதாக பார்க்கப்பட்ட ஒன்று என்றாலும், அமமுகவை நாஞ்சிலார் விமர்சித்துள்ளது கவனிக்கத்தக்கது. அதேசமயம், புகழேந்தி அந்த கட்சியில்தான் இருக்கிறாரா, அல்லது வேறு கட்சிக்கு போக போகிறாரா என்ற தெளிவான முடிவுக்கு இன்னும் வராத நிலையில், அவரை கட்சியை வெளியே வருமாறு நாஞ்சில் சம்பத் வலியுறுத்தி சொல்லி உள்ளதும் இங்கு உற்றுநோக்கத்தக்கது!

English summary
Nanjil Sambath has criticized AMMK and TTV Dinakaran in Chennai Meeting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X