சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஜினி வர மாட்டாருங்க.. பாஜக ஊதுகுழலாக மட்டுமே இருப்பார்.. அடிச்சுச் சொல்லும் நாஞ்சில் சம்பத்!

By Staff
Google Oneindia Tamil News

Recommended Video

    Rajini Political Entry | ரஜினி வந்தால் சசிகலாவிற்கு சாதகமாகும் அரசியல் சூழ்நிலை- வீடியோ

    சென்னை: பேட்ட, தர்பார் என்று சினிமாவில் செம்ம பிஸியாக போய்க் கொண்டிருந்த ரஜினி எனும் காட்டாறு இதோ கடந்த வாரத்திலிருந்து திடீரென மீண்டும் அரசியல் யூ டர்ன் அடித்திருக்கிறது.

    சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டவர், அதிரடியாக 'மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர் மற்றும் அர்ஜூனன் போன்றவர்கள். இதில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜூனன் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்!' என்று போட்டார் ஒரு போடு.

    காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு வெளிப்படை ஆதரவு தந்ததோடு, கூடிய விரைவில் தனது புதிய கட்சி துவங்க இருப்பது குறித்த முறையான அறிவிப்பு வெளிவருவது பற்றி அறிவிக்கப்படும், இந்த போயஸ்கார்டன் மீண்டும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறுமா? என்பதை பொறுத்திருந்து பாருங்கள்....என்றெல்லாம் பொலிடிக்கல் பட்டாஸை கொளுத்திப் போட்டார் கன்னாபின்னாவென.

    அவர் வருவாரா

    அவர் வருவாரா

    இது அவர் எதிர்பார்த்ததை விடவும் மிகப் பெரிதாக தமிழக அரசியலில் வெடித்தது. அதுமட்டுமல்ல, அமித்ஷாவும் மோடியும் 'ஓ.கே! ரஜினி வழிக்கு வருகிறார். தமிழக பா.ஜ.க.வை இவரை வைத்து தலை தப்பிக்க வைத்துவிடலாம்!' என்று ஹேப்பி கணக்குப் போட்டனர். இந்த நிலையில், ரஜினி அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது! அவர் தமிழக பா.ஜ.க.வுக்கு தலைமையேற்பாரா? இதன் மூலம் அ.தி.மு.க. - பா.ஜ.க. ஆட்சி அமையுமா? எனும் ரேஞ்சுக்கெல்லாம் சானல் விவாதங்களும், அரசியல் கட்டுரைகளுமாக அமர்க்களப்பட்டது அரசியல்.

    இடித்துரைக்கும் கட்சிகள்

    இடித்துரைக்கும் கட்சிகள்

    ஆனால் அதேவேளையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமோ ‘முதியவர் ரஜினி இந்த வயதில் அரசியலுக்கு வந்து என்ன பயன்?' என்று இடியாய் இடித்தது. தி.மு.க. தரப்பிலிருந்தும் தாறுமாறான தாக்குதல்கள் சாடையாக நடந்தன.

    சம்பத் பேச்சு

    சம்பத் பேச்சு

    அந்தவகையில் திராவிட அரசியல் கட்சிகள் அனைத்திலும் உறுப்பினராக இருந்த பெருமையை பெற்றிருக்கும் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தோ "மண் குதிரையை நம்பி கரைசேர்ந்தோர் யாருமே இல்லை. அதைப் போலத்தான் ரஜினியின் அரசியலும்.

    பாஜக ஊதுகுழல்

    பாஜக ஊதுகுழல்

    ரஜினி அரசியல் கட்சி துவங்கமாட்டார், அரசியலுக்கு வரவும் மாட்டார். இந்த கருத்தில் நான் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். பா.ஜ.க.வின் ஊதுகுழலாக மட்டுமே அவர் இருப்பார், தொடர்ந்து அப்படியே செயல்படவும் செய்வார். அவர் தனிக்கட்சியும் துவங்கமாட்டார், பிற கட்சிகளிலும் சேரமாட்டார்.

    தோல்விதான் பரிசாக கிடைக்கும்

    தோல்விதான் பரிசாக கிடைக்கும்

    இனி அவர் யாருக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தாலும் அவர்களுக்கு தோல்வி மட்டுமே பரிசாய் கிடைக்கும்." என்று போட்டுத் தாக்கியிருக்கிறார். ரஜினி சார் நீங்க எங்க இருக்கீங்க? இதுக்கு பதில் சொல்லுங்க!

    - ஜி.தாமிரா

    English summary
    Senior politician Nanjil Sampath has said that Rajinikanth will never enter into politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X