சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்களே கமலின் தனித்தன்மையையும் ரஜினி சுயரூபத்தையும் புரிந்து கொள்ளுங்கள்- நாஞ்சில் சம்பத் அட்வைஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினி, கமல் அரசியல் செயல்பாடுகள் பற்றி நாஞ்சில் சம்பத் கருத்து

    சென்னை: ரஜினிகாந்தின் சுயரூபத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

    நாஞ்சில் சம்பத் மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு பின் சசிகலா மற்றும் தினகரனை ஆதரித்தார்.

    பேச்சாளர்

    பேச்சாளர்

    பின்னர் தினகரன் அமமுக கட்சி என்ற ஒன்றை ஆரம்பித்த நிலையில் அதில் அண்ணாவும் திராவிடமும் இல்லை என கூறி வெளியேறிவிட்டார். தற்போது எந்த கட்சியிலும் இணையாமல் பேச்சாளராகவே தொடர்ந்து வருகிறார்.

    கமல் பேட்டி

    கமல் பேட்டி

    இந்நிலையில் அவர் சென்னையில் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் மக்கள் நீதி மய்யம் நாடாளமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று கமல் கூறியுள்ளார்.

    சுயரூபத்தை

    சுயரூபத்தை

    அது போல் தானும் போட்டியிடுவேன் என கமல்ஹாசன் கூறியிருப்பது அவரது தனித்தன்மையை காட்டுகிறது. கட்சி இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதனால் டெல்டா மாவட்டங்களை பார்வையிட செல்லவில்லை என்று கூறிய ரஜினியின் சுயரூபத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

    சட்டம்

    சட்டம்

    கணினியை கண்காணிக்க மோடி அரசு கொண்டு வரும் சட்டம் ஜனநாயக படுகொலையாகும். மோடியை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும். எச் ராஜா, தமிழிசை ஆகிய இருவரும் நெஞ்சில் நஞ்சை வைத்து பேசி வருகின்றனர். அவர்கள் தேவையில்லாத லக்கேஜ்கள் என்றார் நாஞ்சில் சம்பத்.

    English summary
    Nanjil Sampath says that people should understand Rajinikanth's self image and Kamal haasan's special personality.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X