சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

களமிறங்கும் அதிமுகவின் முக்கிய புள்ளி.. களைகட்டும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தல்

Google Oneindia Tamil News

Recommended Video

    களைகட்டும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தல்

    சென்னை: மே19 நடைபெற உள்ள, திருப்பரங்குன்றம் சட்டசபை இடைத்தேர்தலுக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட வாய்ப்பு கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மதுரை மாவட்டத்தில் உள்ளது, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.கே. போஸ் திடீரென உடல்நலக் குறைவால் இறந்தார். இதையடுத்து அத்தொகுதிக்கு வரும், மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

    இந்த இடைத்தேர்தலில் சீட் பெற, அதிமுகவில் கடும் போட்டாபோட்டி நடந்து வருகிறது. ஏனெனில், இது அதிமுக எம்எல்ஏ மறைந்த தொகுதியாகும்.

    2 பொட்டி வச்சீங்களே.. ஓட்டு போடனும்னு சொன்னீங்களா அதிகாரிகளே! தேனி தொகுதியில் பெரும் குளறுபடி 2 பொட்டி வச்சீங்களே.. ஓட்டு போடனும்னு சொன்னீங்களா அதிகாரிகளே! தேனி தொகுதியில் பெரும் குளறுபடி

    திட்டம்

    திட்டம்

    இயல்பாகவே, அதிமுகவுக்கு அதிகம் ஆதரவு உள்ள தொகுதி, இதுவாகும். எனவே கோதாவில் களமிறங்க நத்தம் விஸ்வநாதன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2016 சட்டசபை தேர்தலின்போது, நத்தம் விஸ்வநாதன், தனது தொகுதியான நத்தம் தொகுதியில், போட்டியிட ஜெயலலிதாவிடம் கேட்டிருந்தார். ஆனால், நத்தமும் தரப்படவில்லை, அதன்பிறகு அவர் விரும்பிய திருப்பரங்குன்றம் தொகுதியைும் தரவில்லை.

    ஆத்தூர் தொகுதி

    ஆத்தூர் தொகுதி

    நத்தன் விஸ்வநாதனுக்கு, கடந்த சட்டசபை தேர்தலில், ஆத்தூர் தொகுதியை ஒதுக்கினார் ஜெயலலிதா. ஆத்தூர் தொகுதி திமுகவின் கோட்டையாக உள்ளது. எனவே, திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிடம் போட்டியிட்டு நத்தம் விஸ்வநாதன் தோல்வியடைந்தார். இதன்பிறகு அரசியலில் சரிவர ஆர்வம் காட்டாமல் இருந்தார் நத்தம் விஸ்வநாதன்.

    நெருக்கம்

    நெருக்கம்

    ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் அணியில் சேர்ந்த அவர், தற்பொழுது ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரிடமும் நெருக்கமாக இருக்கிரார். எனவே, திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட நத்தம் விஸ்வநாதன் விரும்புகிறார். தனக்கு சீட் கிடைக்கும் என நம்புகிறார்.

    அதிமுக பேச்சு

    அதிமுக பேச்சு

    எனவேதான், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சீட் கேட்கிறார் என்ற பேச்சு அதிமுகவினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. விஸ்வநாதனின் ஆதரவாளர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள் என்ற பேச்சு மாவட்ட அளவில் பரவலாக பேசப்பட்டும் வருகிறது.

    English summary
    Natham viswanathan try to get Thiruparankundram assembly constituency for by election, says sources.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X