சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெற்றி பார்முலாவை சொல்லுங்கள்.. திமுக ஜெயித்தது எப்படி? ஸ்டாலினிடம் வரிசைகட்டும் தேசிய தலைவர்கள்!

லோக்சபா தேர்தலில் திமுக வெற்றிபெற்றது எப்படி என்று தேசிய கட்சித் தலைவர்கள் ஆலோசிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    MK Stalin: தேர்தலில் இமாலய வெற்றி... ஸ்டாலினிடம் வரிசைகட்டும் தேசிய தலைவர்கள்!- வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக வெற்றிபெற்றது எப்படி என்று தேசிய கட்சித் தலைவர்கள் ஆலோசிக்க தொடங்கி இருக்கிறார்கள். இதை பின்பற்றி இனி வரும் காலங்களில் பாஜகவை எதிர்க்க கட்சிகள் முடிவெடுத்து உள்ளது.

    நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக இமாலய வெற்றியை பெற்றுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 37 இடங்களில் திமுக கூட்டணி வென்றுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட 19 இடங்களிலும் திமுக தனியாக வென்று இருக்கிறது.

    லோக்சபா தேர்தலில் தமிழகத்தில்தான் பாஜக மிக மோசமாக தோல்வியை தழுவி உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வைத்தும் கூட பாஜக தோல்வி அடைந்துள்ளது.

    கோபமா.. எங்க மேலயா.. நோ நோ.. நீங்களா கிளப்பி விடாதீங்க.. தமிழிசை தடால்! கோபமா.. எங்க மேலயா.. நோ நோ.. நீங்களா கிளப்பி விடாதீங்க.. தமிழிசை தடால்!

    ஆனால் மற்ற கட்சிகள்

    ஆனால் மற்ற கட்சிகள்

    ஆனால் மற்ற பெரிய மாநில கட்சிகளின் நிலை அப்படி கிடையாது. திரிணாமுல் காண்கிரஸ், பகுஜன் சமாஜ் , சமாஜ் வாதி, தெலுங்கு தேசம்,ஆம் ஆத்மி ஆகிய மாநில கட்சிகள் பாஜகவிடம் மண்ணை கவ்வி இருக்கிறது. திரிணாமுல் அதிக இடங்களை பெற்றாலும் கூட பாஜக மேற்கு வங்கத்தில் பெரிய கட்சியாக மாறியுள்ளது. இதெல்லாம் போக காங்கிரஸ் மிக மோசமான தோல்வியை தழுவி உள்ளது.

    ஒரே கட்சி

    ஒரே கட்சி

    இந்தியாவில் பாஜகவை அனுமதிக்காமல் முழுக்க முழுக்க மிக சிறப்பான வெற்றியை தந்த ஒரே மாநில கட்சி திமுகதான். ஆந்திரா, தெலுங்கானாவில் பாஜக தன்னுடைய வாக்கு வங்கியை அதிகரித்து உள்ளது. ஆனால் தமிழகத்தில் இருந்த வாக்கு வங்கியையும் பாஜக இழந்து இருக்கிறது. பாஜகவை எதிர்த்து அதில் வெற்றிபெற்ற ஒரே கட்சியாக திமுக மாறியுள்ளது.

    கேள்விகள்

    கேள்விகள்

    இதுதான் பிற மாநில தலைவர்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி உள்ளது. 8 வருடமாக ஆட்சியில் இல்லை, கடந்த லோக்சபா தேர்தலில் கிளீன் போல்ட், ஆர்கே நகர் தேர்தலில் டெபாசிட் போனது, ஸ்டாலின் இப்போதுதான் தலைவராகி உள்ளார். இத்தனை சிக்கல்களுக்கும் இடையில் அதிமுகவின் மிகப்பெரிய கூட்டணியை எதிர்த்து எப்படி திமுக வென்றது என்று கேள்விகள் கேட்டு வருகிறார்கள்.

    ஸ்டாலினிடம் ஆலோசனை

    ஸ்டாலினிடம் ஆலோசனை

    இது தொடர்பாக ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தவும் மாநில தலைவர்கள் திட்டமிட்டு இருக்கிறார். பாஜகவை தோல்வி அடைய செய்யும் பார்முலாவைத்தான் தற்போது மாநில கட்சிகள் தேடி வருகிறது. ஸ்டாலின் பயன்படுத்திய முறையை வைத்து இனி வரும் தேர்தல்களில் பாஜகவை எதிர்க்கலாம் என்று மாநில கட்சிகள் எதிர்பார்க்கிறது.

    ஸ்டாலின் என்ன

    ஸ்டாலின் என்ன

    ஸ்டாலின் தமிழகத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்தார். 20 இடங்களை இவர் கூட்டணி கட்சிகளுக்கு அள்ளிக் கொடுத்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் யாருக்கு எங்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதை மிக சரியாக ஆராய்ந்து இவர் இடங்களை தேர்வு செய்து பிரித்து கொடுத்தது வெற்றிக்கு பின் புலனாகிறது.

    மிக முக்கியம்

    மிக முக்கியம்

    முக்கியமாக பெரிய வெற்றிக்கு ஏங்கி கொண்டு இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 4 இடங்களை கொடுத்து, நான்கிலும் வெற்றி பெற வைத்ததும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த லாஜிக் அரசியல், திட்டமிடல்தான் மற்ற கட்சிகளிடம் மிஸ்ஸானது. இதை விரைவில் அவர்கள் ஸ்டாலினிடம் இருந்து கற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

    English summary
    National leaders ask DMK about their winning strategy in Lok Sabha elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X