சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகம் முழுக்க விடாத மழை.. நாளை நடைபெறவிருந்த தேசிய திறன் மேம்பாட்டு தேர்வு ஒத்திவைப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவிருந்த தேசிய திறன் மேம்பாட்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாளை தேசிய திறன் மேம்பாட்டு (NMMS) தேர்வை தமிழக பள்ளிக்கல்வித்துறை நடத்துவதாக அறிவித்து இருந்தது. இந்த தேர்வை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவிருந்தனர்.

National Skill Development Examination postponed

இந்த நிலையில், சென்னை உட்பட தமிழகம் முழுக்க பல மாவட்டங்களில் அடை மழை பெய்து வருகிறது. சென்னை முதல் நெல்லை, தூத்துக்குடி வரை மழையின் தாக்கம் இருக்கிறது. மழை பெய்துவிட்டு வெறிக்க கூடியதாகவும் இல்லை. தொடர் மழையாக உள்ளது.

இதனால் பல மாவட்டகளில் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே மழையின் காரணமாக, தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவிருந்த தேசிய திறன் மேம்பாட்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுவதாக, தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி இன்று இரவு அறிவித்துள்ளார்.

மறு தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

English summary
National Skill Development Examination to be held tomorrow in Tamil Nadu has been postponed. This decision has been made due to rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X