சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2020 தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் - 2 தமிழக ஆசிரியர்கள் உள்பட 47 பேர் விருதுக்கு தேர்வு

2020ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற உள்ளவர்களின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: நாட்டில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர். டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி 'ஆசிரியர் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

Recommended Video

    Rajiv Gandhi Khel Ratna Award for Rohit Sharma and Mariappan Thangavelu | ONEINDIA TAMIL

    ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு இந்நாளில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற உள்ளவர்களின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.

     National Teachers Award 2020 Two teachers from Tamil Nadu Selected for National Awards

    சிறப்பு பிரிவில் 2 ஆசிரியர்கள் என மொத்தம் 47 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருது பெற தேர்வாகி இருக்கின்றனர். அதில், தமிழகத்தில் இருந்து சென்னை அசோக்நகரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சி.சரஸ்வதி, விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப் ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.

    சென்னை அசோக்நகர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சி.சரஸ்வதி கடந்த 32 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் இருக்கிறார். விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர் சரஸ்வதி, இது என்னுடைய தனிப்பட்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றி அல்ல என்று கூறியுள்ளார். என்னுடைய பள்ளியில் என்னுடன் சேர்ந்து பணியாற்றும் சக ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளின் கூட்டு முயற்சி ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

    கைலாசாவின் பொற்காசுகள்... காலணா முதல் 10 காசு வரை 5 வகை தங்க நாணயங்கள் வெளியிட்ட நித்யானந்தாகைலாசாவின் பொற்காசுகள்... காலணா முதல் 10 காசு வரை 5 வகை தங்க நாணயங்கள் வெளியிட்ட நித்யானந்தா

    தேசிய நல்லாசிரியர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் டெல்லி விக்யான் பவனில் செப்டம்பர் 5ஆம் தேதியன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் விருது வழங்கப்படும்.

    English summary
    Indian Education ministry today announced National Level to select the award recipients for the year 2020.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X