வணக்கம்டா மாப்ள.. இந்தியாவில் சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் மதுரைக்கு 3-வது இடம்!
சென்னை: இந்தியாவின் சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரிவில் மதுரை மாநகராட்சிக்கு 3-வது இடம் கிடைத்திருக்கிறது.
மூன்றாவது தேசிய நீர் விருதுகள் அறிவிக்கும் நிகழ்வு இன்று நடந்தது. இதில் மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டுக்கான தேசிய நீர் விருதுகளை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அறிவித்தார். இதில் தமிழகத்துக்கு இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. தென் மாநிலங்களில், நீர்வளத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கான சிறந்த கிராமப் பஞ்சாயத்துக்கான பிரிவில், செங்கல்பட்டு மாவட்டம் வெள்ளப்புத்தூர் ஊராட்சி 2-ம் இடத்தைப் பெற்றிருக்கிறது.
அதேபோல, சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரிவில், மதுரை மாநகராட்சி 3-வது இடத்தைப் பெற்றிருக்கிறது. சிறந்த மாநிலங்கள் பிரிவில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தையும், ராஜஸ்தான் இரண்டாவது இடத்தையும், தமிழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்திருப்பதாக அமைச்சர் அறிவித்தார்.
இந்தியாவின் தற்போதைய தண்ணீர் தேவை, ஆண்டுக்கு சுமார் 1,100 பில்லியன் கன மீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது 2050-ம் ஆண்டு வாக்கில், 1,447 பில்லியன் கன மீட்டராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது:

அதேபோல, சிறந்த தொழிற்சாலைகளுக்கான பிரிவில், தமிழ்நாட்டில் உள்ள ஹுண்டாய் கார் தொழிற்சாலைக்கு இரண்டாம் பரிசும், சிறந்த தொண்டு நிறுவன பிரிவில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா-வுக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.
இதை தன்னுடைய டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் ஷெகாவத். அதில், ''இன்று நான் தேசிய நீர் விருதுகள் 2020 வெற்றியாளர்களை அறிவித்தேன். உத்தரப்பிரதேசம் முதலிடத்தையும், ராஜஸ்தான் இரண்டாம் இடத்தையும், தமிழ்நாடு மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையில் கொரோனா 2-வது அலையை விட.. 3-வது அலை மிக அதிவேகம்.. டேட்டாவுடன் விளக்கும் விஜயானந்த்
மூன்று மாநில முதல்வர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சிறப்பு நன்றிகளை உரித்தாக்குகிறேன். மாநிலத்தின் நீர் மேலாண்மை குறித்து சரியான தகவல்களை தந்தமைக்கு நன்றி'' என்று டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.