சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு.. 20க்குப் பிறகு வடகிழக்கு பருவமழை.. வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: வடதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்ற வாரம் தமிழகத்தில், வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மழை பெய்தது. வங்ககடல் பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்தது.

NE monsoon rain expected in Tamilnadu says Chennai Meteorological Centre

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா கூறுகையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்யும். கடல் அடுத்த சில நாட்களுக்கு கொந்தளிப்பாக காணப்பட வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திராவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும். ஆந்திர கடலோர பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்யும்.

தற்போது வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது என்று ஸ்டெல்லா தெரிவித்துள்ளார்.

இந்த சீசனில் வட கிழக்குப் பருவ மழையானது இயல்பை விட 12 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English summary
SW monsoon will be withdrawing from 20th Oct. Conditions likely to become favourable for commencement of northeast monsoon.Cyclonic circulation lies over south coastal Andhra Pradesh due to this there'll be scattered rains, thunderstorm& gusty winds over Tamil Nadu&Puducherry:IMD
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X