சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொத்தென்று சரிந்த மாணவர்கள்.. கரெக்டாக பைக் மீது அமர்ந்த நிலையில் விழுந்த 'வெள்ளை பேன்ட்'!

பைக் மீது மாணவர்கள் சரிந்துவிழும் வீடியோ வைரலாகி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பஸ் கூரை மீது பஸ் டே அட்டகாசம்...பல மாணவர்கள் கைது!

    சென்னை: பஸ் டே கொண்டாட்டத்தின்போது கடுப்பான டிரைவர் பிரேக் போட்ட வேகத்தில் பஸ் கூரையிலிருந்து விழுந்த ஒரு மாணவன் அமர்ந்த நிலையிலேயே பைக்கில் லேண்ட் ஆனதைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை.

    சென்னை போலீஸ் பலமுறை வார்னிங் தந்தும் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டத்தை இன்னும் கைவிடவில்லை. எத்தனையோ முறை கைது நடவடிக்கை எடுக்கப்பட்டும், பஸ் டே கலாச்சாரத்தை முழுவதுமாக ஒழிக்க முடியவில்லை.

    இவ்வளவு நாள் லீவு முடிந்து நேற்று சென்னையில் காலேஜ் திறக்கப்பட்டது. முதல்நாள் காலேஜ் என்பதால் பஸ் டே கொண்டாடவும் பட்டது. அதன்படி பஸ் கூரை மீது ஏறி நின்று மாணவர்கள் அட்டகாசம் செய்தார்கள்.

    பிள்ளைங்களா இதுங்க.. எத்தனை முறைதான் சொல்றது.. பஸ் கூரை மீது அட்டகாசம்.. 17 மாணவர்கள் கைது! பிள்ளைங்களா இதுங்க.. எத்தனை முறைதான் சொல்றது.. பஸ் கூரை மீது அட்டகாசம்.. 17 மாணவர்கள் கைது!

    நிறைந்து வழிந்தது

    நிறைந்து வழிந்தது

    பஸ்ஸூக்குள்ளே கூட்டம் வழியும்.. பஸ்ஸூக்கு மேலேயும் கூட்டம் வழியுமா என்ன? அப்படித்தான் நேற்று ஒரு பஸ்ஸில் மாணவர்கள் வழிந்து நிறைந்தனர். அதில் ஒரு மாணவர் பஸ்ஸின் முன்பக்கம், அதாவது பெயர்பலகை இருக்கும் இடத்தில் தனது காலை தொங்க போட்டுக் கொண்டு உட்கார்ந்துவிட்டார். வெள்ளை பேண்ட் அணிந்திருந்த இவர்தான் இந்த கும்பலுக்கு லீடர் போல தெரிகிறது.

    திணறிய டிரைவர்

    திணறிய டிரைவர்

    இவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு பக்கம் டிராபிக், மறுபக்கம் பொதுமக்களின் முகசுளிப்புக்கு நடுவில் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்ஸுக்கு முன்புறம் டூவீலரில் 2 பேர் சென்று கொண்டிருந்தனர். இவ்வளவு பேரையும் எப்படி சமாளித்து ஓட்டுவது என தெரியாமல் டிரைவர் விழித்து கொண்டிருந்தார்.

     வெள்ளை பேன்ட்

    வெள்ளை பேன்ட்

    முன்னால் போய் கொண்டிருந்த டூவீலர் மீதும் பேருந்து இடித்துவிடாமல் இருக்க, டிரைவர், படார் என பிரேக் போட்டார். இதில், மாணவர்கள் பஸ் கூரையில் இருந்து குப்புற விழுந்தனர். அதிலும் அந்த வெள்ளை பேண்ட் மாணவர்தான் முதலில் விழுந்தார்.

    5 பேர் காயம்

    5 பேர் காயம்

    முன்னால் போன பைக் மீது உட்கார்ந்த நிலையில் கரெக்ட்டாக சீட்டில் வந்து லேண்ட் ஆனார் அந்த மாணவர். விழுந்த வேகத்தில் அடிபட்டதா என்று தெரியவில்லை. 5 பேர் இதில் காயமடைந்ததாக சொல்லப்படுகிறது.

    English summary
    In Chennai, College Students celebrated the Bus day and nearly 50 landed on bike
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X