சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உடனே வர முடியாது.. கூடுதல் அவகாசம் வேண்டும்.. வருமான வரித்துறை சம்மனுக்கு விஜய் அதிரடி பதில்!

வருமான வரித்துறை சம்மனுக்கு விளக்கம் அளிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மாஸ்டர் படப்பிடிப்பில் மாஸ் காட்டிய விஜய் | FILMIBEAT TAMIL

    சென்னை: வருமான வரித்துறை சம்மனுக்கு விளக்கம் அளிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.

    நடிகர் விஜய் இன்றே ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.வருமான வரித்துறை சோதனையை அடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கும் வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

    மேலும் பிகில் பட தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரத்துக்கும் ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    வேன் மீது மட்டும் அவர் ஏறவில்லை.. எங்கள் மனதிலும் ஒரு படி ஏறிவிட்டார்.. கொண்டாடும் விஜய் ரசிகர்கள் வேன் மீது மட்டும் அவர் ஏறவில்லை.. எங்கள் மனதிலும் ஒரு படி ஏறிவிட்டார்.. கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

    என்ன அவகாசம்

    என்ன அவகாசம்

    இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு முதலில் 3 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. மூன்று நாட்களில் வருமான வரித்துறை அலுவலகத்தில் தோன்றி விளக்கம் அளிக்கலாம். சம்மனுக்கு மூன்று நாட்களில் பதில் அளிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் சில மணி நேரத்தில் இந்த காலக்கெடு மாற்றப்பட்டது . இந்த சம்மனுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.

    உடனே பதில்

    உடனே பதில்

    உடனே பதில் அளிக்க வேண்டும். இன்றே விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளது. இதற்காக சென்னை வருமான வரித்துறை அலுவலகம் வர வேண்டும் என்று அவசர அவசரமாக சம்மன் அனுப்பி உள்ளது. வருமான வரித்துறை இப்படி திடீர் என்று முடிவை ஏன் மாற்றியது என்று விளக்கம் அளிக்கப்படவில்லை. அதேபோல் விஜய் வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அங்கிருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை.

    சம்மன் எப்படி

    சம்மன் எப்படி

    அப்படி இருக்கும் போது ஏன் அவருக்கு சம்மன் அனுப்பி இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராக நடிகர் விஜய் கூடுதல் அவகாசம் கேட்டு இருக்கிறார். உடனடியாக விசாரணைக்கு வர முடியாது. கூடுதல் அவகாசம் தேவை. குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அவகாசம் தேவை என்று விஜய் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டு இருக்கிறது.

    வழங்கப்பட வாய்ப்பில்லை

    வழங்கப்பட வாய்ப்பில்லை

    ஆனால் இதற்கு வருமான வரித்துறை சார்பாக அளிக்கப்பட்ட பதில் குறித்த தகவல் வெளியாகவில்லை. பெரும்பாலும் விஜய்க்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட வாய்ப்பில்லை என்கிறார்கள். கூடுதலாக நாளை வரை அவகாசம் தர மட்டுமே வாய்ப்புள்ளது என்கிறார்கள். நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கிறார். நெய்வேலியில் இதன் ஷூட்டிங் தீவிரமாக நடந்து வருகிறது.

    English summary
    Need more Time, Says Actor Vijay to IT department summon after the raid.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X