சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வு 2021.. மாணவர்கள் விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு.. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: இளங்கலை மருத்து படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்வி இடங்கள் நீட் தேர்வு மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

'நீட்' தேர்வு. . நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி செய்த தரமான சம்பவம்.. பெருகும் உறுப்பினர்கள் ஆதரவு? 'நீட்' தேர்வு. . நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி செய்த தரமான சம்பவம்.. பெருகும் உறுப்பினர்கள் ஆதரவு?

இருப்பினும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி நீட் தேர்வு முறையாக நடத்தப்படும் எனக் கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.

NEET 2021 last date for registartion extended

மேலும், நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

அதன்படி நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதேபோல நீட் விண்ணப்பங்களில் திருத்தங்களை ஆகஸ்ட் 11 முதல் 14 வரை மேற்கொள்லாலம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
National Testing Agency, NTA has extended the registration date for NEET 2021. The last date to apply for the National Eligibility cum Entrance Test has been extended to August 10, 2021 till 5 pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X