சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் குழப்பங்கள் .. திடீரென தேர்வு மையங்களை மாற்றியதாக அறிவிப்பு.. மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இந்த ஆண்டும் எத்தனை எத்தனை பாதிப்புகளை ஏற்படுத்தப் போகிறதோ? என கவலைப்படும் வகையில் திடீரென அறிவிக்கப்பட்ட தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

பிளஸ் டூ தேர்வில் அதிகபட்சமாக மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டன் அடிப்படையிலான நீட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.. இல்லையெனில் மருத்துவபடிப்பு கனவு நிறைவேறாது. இதனால்தான் அரியலூர் அனிதா தூக்கிட்டு மாண்டு போனார்.

neet centres changed

கடந்த ஆண்டு அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு மையங்களை ஏற்படுத்தி தமிழக மாணவர்கள் அல்லோகலப்பட்டனர். கேரளாவுக்கு சென்ற மாணவரின் தந்தை அங்கே உயிரிழந்து போனார். நீட் தேர்வு மைய கட்டுப்பாடுகளோ மாணவர்களை உளவியல் ரீதியாக சித்ரவதை செய்து கொண்டிருக்கிறது.

நீட் என்றாலே அதிர்ச்சி, அச்சம் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆண்டும் தனது சித்துவேலைகளை காட்டியிருக்கிறார்கள். நீட் தேர்வு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதனால் கடந்த வாரமே மாணவர்கள் ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

neet centres changed

இந்த நிலையில் திடீரென நீட் தேர்வு மையங்களை மாற்றிவிட்டோம்.. பட்டியலை பார்த்துக் கொள்ளுங்கள்.. அத்துடன் மே 4-ந் தேதியன்று ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தலை விடுத்துள்ளது நீட் நிர்வாகம். நீட் இந்த அறிவிப்பை வெளியிட்டது நேற்று.

இத்தகவல் சென்று சேராத மாணவர்கள் வழக்கம் போல பிரவுன்சிங் சென்டர்களுக்கு சென்று ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய முயற்சித்திருக்கின்றனர். ஆனால் இன்று பகலில் நீட் இணையதளம் முடங்கி இருந்தது.

தங்களது தேர்வு மையம் மாறி இருக்கிறதா? இல்லையா? என தெரியாமல் மாணவர்களும் பெற்றோர்களும் விழிபிதுங்கி உள்ளனர். இன்னும் 2 நாட்களில் எத்தனை குழப்பம் வரப்போகிறதோ?

மாற்றப்பட்ட நீட் தேர்வு மையங்கள் விவரம்:

English summary
The examination centres for the NEET (UG) 2019 have beeng changed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X