சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்கலையா.. நல்ல வாய்ப்பு.. அவகாசம் நீட்டிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு 2020-2021ம் ஆணடில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் மே 3ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் ஜனவரி 6ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்ககு ஒவ்வொரு ஆண்டும் நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

 neet exam applying last date extended to january 6 2020

அந்த வகையில் மே 3ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நீட் தேர்வு நடத்தப்படும் என அந்த தேர்வை நடத்த உள்ள தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்திருந்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் ஜனவரி 6ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுக்கு www.nta.ac.in / www.ntaneet.nic.in என்ற இணையதளங்களில் கடந்த டிச.2-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றுஅறிவிக்கப்பட்டது. நேற்று நள்ளிரவுடன் விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்து இருந்தது. தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். உட்பட நாடுமுழுவதும் சுமார் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

தூத்துக்குடி அருகே 2வது ஏவுதளம்.. சந்திரயான் 3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி.. சிவன் பேட்டிதூத்துக்குடி அருகே 2வது ஏவுதளம்.. சந்திரயான் 3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி.. சிவன் பேட்டி

இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஜனவரி 6ம் தேதி நீட்டித்திருப்பதாக தேசிய தேர்வு முகமை இன்று அறிவித்துள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், விண்ணப்பிக்க மறந்தவர்கள் இந்த 6 நாளுக்குள் விண்ணப்பிப்பது நன்று.

English summary
neet exam applying last date extended to january 6 2020, how apply details here
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X