சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக ஆட்சியில் அல்ல… அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு நுழைந்துவிட்டது… ஸ்டாலின் பிரச்சாரம்

Google Oneindia Tamil News

சென்னை: ராகுல்காந்தி பிரதமரானதும் தமிழகத்தில் அதிமுக அரசு தானாக கவிழும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வட சென்னை மக்களவை தொகுதி தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமி, பெரம்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகருக்கு ஆதரவாக மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

NEET Exam Cancel: AIADMKs election manifesto Is Fun Says Stalin

அப்போது பேசிய அவர், அதிமுக அரசை பிரதமர்மோடி முட்டுக்கொடுத்து காப்பாற்றி வருகிறார் என்று விமர்சனம் செய்தார். நீட்தேர்வை ரத்து செய்வோம் என அதிமுகவும் தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது தான் வேடிக்கை என்று தெரிவித்த ஸ்டாலின், உங்களின் வாக்கு இந்தியாவின் தலையெழுத்தை மாற்றப்போகிறது என்றார்.

திமுக ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வு தமிழகத்தின் உள்ளே நுழையவில்லை, என்றும் , அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு நுழைந்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார். சமையல் கியாஸ் விலை மற்றும் கேபிள் கட்டணம் பழைய நிலைக்கு கொண்டுவரப்படும் என்று உறுதி அளித்த ஸ்டாலின், மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும் கூறினார்.

ஏழைகளுக்கு தண்ணீர்கூட கொடுக்க முடியாத அரசு.. கமல்ஹாசன் பாய்ச்சல் ஏழைகளுக்கு தண்ணீர்கூட கொடுக்க முடியாத அரசு.. கமல்ஹாசன் பாய்ச்சல்

உள்ளாட்சி அமைப்புகளே இல்லை என்றும், உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் கொள்ளை அடிக்க முடியாது என்பதால் தேர்தலை அ.தி.மு.க அரசு நடத்தவில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தம்மைப்போல தொகுதிக்கு அதிக நேரம் செலவிட்ட எம்.எல்.ஏக்களோ, எம்.பி க்களோ யாருமே கிடையாது என்றும் தொகுதிக்கு அதிக நாள் சென்ற எம்எல்ஏ என்ற பெருமை எனக்கு உண்டு எனவும் மு.க. ஸ்டாலின் பேசினார்.

English summary
Neet Exam is Not in the DMK Rule; Neet Exam has entered In the AIADMK regime : Stalin campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X