சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வு ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் தடைக்கல் - தங்கம் தென்னரசு

அரசுப்பள்ளியில் படித்து நேரடியாகத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நீட் தேர்ச்சி எப்போதும் எட்டாக்கனிதான். என்று தங்கம் தென்னரசு எம்எல்ஏ குறிப்பிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ள எல்லா மாணவர்களும் மருத்துவப் படிப்பில் இடம் பெறப் போவதில்லை என்பதும், அவர்கள் மீண்டும் பல முறை தேர்வு எழுதும் சூழல் உருவாகும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்று முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திமுக எம்எல்வுமான தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சாதாரண ஏழை எளிய கிராமப் புற மாணவர்களுக்கு நீட் எப்போதும் தடைக்கல்லாக இருந்து அவர்களின் மருத்துவக் கல்விக் கனவுகளைச் சிதைக்கவே செய்யும் என்றும் பதிவிட்டுள்ளார் தங்கம் தென்னரசு.

நீட் நுழைவுத் தேர்வில் 664 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்த தேனியைச் சேர்ந்த மாணவருக்கு வாழ்த்துக் கூறி தி.மு.க. எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

NEET exam medical dream of poor students - Thangam Tennarasu

அதில், "நீட் தேர்வு முடிவுகள் வந்திருக்கின்றன. தேனி மாவட்டம் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல் நிலைப் பள்ளியில் +2 படித்த மாணவர் ஜீவிதகுமார் இந்தாண்டு நீட் தேர்வில் 664 மதிப்பெண்கள் பெற்றுருக்கின்றார். வாழ்த்துகள்!

ஆனால், இதை மட்டும் சுட்டிக்காட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் எல்லாம் நீட் தேர்வில் எளிதாக வெற்றி பெற்று மருத்துவர்கள் ஆகத்தொடங்கி விட்டார்கள் எனவும் , நீட் தேர்வுக்கு எதிரான அரசியல் கட்சிகள் வாயைப் 'பொத்தலாம்' என்கின்ற அளவுக்கு சில நாளேடுகளும், அறிவி ஜீவிகளும் குதிக்கத் துவங்கி இருப்பது நகைப்பிற்குரியது.

இப்போது இந்த மதிப்பெண் பெற்ற மாணவர் முதல் முறையிலேயே ( First Attempt) இந்த மதிப்பெண் பெறவில்லை. கடந்த முறை அவர் நீட் எழுதிய போது பெற்ற மதிப்பெண் 193. இந்த ஆண்டு அவரால் 664 மதிப்பெண் பெற முடிகிறதென்றால் அவர் தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து அதன் வாயிலாகத் தனியே பெற்ற பயிற்சி தான் காரணம். அதுவும் அவர் பால் அக்கறை கொண்ட ஆசிரியர்கள் நிதியுதவி செய்து தனியார் பயிற்சி மையத்தில் படிக்க வைத்ததால் சாத்தியமாகி இருக்கின்றது.

நீட்டை எதிர்த்து ஆசிரியர் பணியை துறந்த சபரிமாலாவின் ஆதரவில் சாதித்த அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார்நீட்டை எதிர்த்து ஆசிரியர் பணியை துறந்த சபரிமாலாவின் ஆதரவில் சாதித்த அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார்

இதில் இருந்து ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசுப்பள்ளியில் படித்து நேரடியாகத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நீட் தேர்ச்சி எப்போதும் எட்டாக்கனிதான். பயிற்சி மையங்களில் பல லட்சம் பணம் கட்டித் திரும்பத் திரும்ப பயிற்சி எடுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நீட் தேர்வெழுதும் மாணவர்களே வெற்றி பெற இயலுமே ஒழிய, சாதாரண ஏழை எளிய கிராமப் புற மாணவர்களுக்கு நீட் எப்போதும் தடைக்கல்லாக இருந்து அவர்களின் மருத்துவக் கல்விக் கனவுகளைச் சிதைக்கவே செய்யும்.

இன்னொன்று, நீட் தேர்ச்சி என்பதாலேயே எம். பி.பி.எஸ் இடம் கிடைத்து விடாது. அது விண்ணப்பிப்பதற்கான ஒரு தகுதி மட்டுமே. எனவே நீட் தேர்வில் தகுதி ( qualification ) பெற்றுள்ள எல்லா மாணவர்களும் மருத்துவப் படிப்பில் இடம் பெறப் போவதில்லை என்பதும், அவர்கள் மீண்டும் பல முறை தேர்வு எழுதும் சூழல் உருவாகும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

இதை எல்லாம் மறைத்து நீட் வாராது வந்த மாமணி என குதூகலம் அடையும் பிரகஸ்பதிகள் தான் தங்கள் வாயைப் பொத்திக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் தங்கம் தென்னரசு.

English summary
Former Minister of School Education and DMK MLA Thangam Tennarasu has said that it should be noted that not all students who qualify for the NEED exam will be admitted to the medical course and they will have to write the exam again and again. Gold South states that NEED has always been a stumbling block for ordinary poor rural students and will only shatter their medical education dreams.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X