சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பாதிப்பு.. நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: ஜூலை 26-ம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக இந்தியாவில் 6.35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா காரணமாக நாடு முழுக்க 6வது முறையாக தளவுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

Neet exam postponed to September 13

தற்போது கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் மக்கள் தீவிரமாக ஊரடங்கை கடைப்பிடித்து வருகிறார்கள். மற்ற இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போதும் நாடு முழுக்க பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

எங்களை பார்த்து அப்படி சொல்வதா? மோடியின் பேச்சால் கலக்கத்தில் சீனா.. தூதரகம் வெளியிட்ட அறிக்கை!எங்களை பார்த்து அப்படி சொல்வதா? மோடியின் பேச்சால் கலக்கத்தில் சீனா.. தூதரகம் வெளியிட்ட அறிக்கை!

நீட் தேர்வு தமிழகத்தில் வரும் மே 3ம் தேதி நடக்க இருந்தது. இது ஜூன் மாதம் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜூலை 26-ம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

JEE main தேர்வு - செப்டம்பர் 1-6, 2020க்கும், JEE Advanced தேர்வு - செப்டம்பர் 27, 2020க்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

English summary
Neet exam postponed to September 13 due to lockdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X