சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட்டுக்கு செட்டான தமிழக மாணவர்கள்.. கடந்த ஆண்டைக்காட்டிலும் 9.1% அதிகம் தேர்ச்சியடைந்து அசத்தல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் தேர்வு தோல்வி.. அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் மாணவிகள்- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிகளவு மாணவர்கள் தேர்தசி பெற்று அசத்தியுள்ளனர்.

    நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

    நீட் தேர்வுக்கான வினாத்தாள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்தே தயாரிக்கப்படுவதால் தமிழக மாணவர்களால் அதனை எதிர்கொள்ள முடியவில்லை என தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

    நீட் தேர்வு.. தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி.. முதலிடம் பிடித்தார் ஸ்ருதி!நீட் தேர்வு.. தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி.. முதலிடம் பிடித்தார் ஸ்ருதி!

    அனிதா மரணம்

    அனிதா மரணம்

    எதிர்க்கட்சிகளும் நீட்டுக்கு எதிராக களத்தில் குதித்தன. நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் உயிரை விட்டார் அரியலூர் மாணவி அனிதா. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    நீட் எழுதினால்தான் மருத்துவம்

    நீட் எழுதினால்தான் மருத்துவம்

    இருப்பினும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவப்படிப்பு சாத்தியம் என்ற நிலை உருவானதால் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள தொடங்கினர். கடந்த ஆண்டும் தமிழகத்தில் உயிர் பலி வாங்கியது நீட் தேர்வு.

    கடந்த ஆண்டு 39.56%

    கடந்த ஆண்டு 39.56%

    கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 39.56 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால் நாடு முழுவதுமான மாநில வாரியான பட்டியலில் தமிழகம் 35வது இடத்தை மட்டுமே பெற்றது

    இந்த ஆண்டு 48.57% தேர்ச்சி

    இந்த ஆண்டு 48.57% தேர்ச்சி

    இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

    9.1 சதவீதம் அதிகமாகும்

    9.1 சதவீதம் அதிகமாகும்

    தமிழகத்தில் முதல் முறையாக அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 9.1 சதவீதம் அதிகமாகும்.

    வினாத்தாள் எளிமையாக இருந்தது

    வினாத்தாள் எளிமையாக இருந்தது

    இந்த ஆண்டு நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வுக்கு பின் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான வினாத்தாள் எளிமையாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

    எதிர்பார்க்கப்பட்ட முடிவு

    எதிர்பார்க்கப்பட்ட முடிவு

    உயிரியல் எளிமையாகவும், வேதியியல் மிதமாகவும், இயற்பியல் மட்டுமே சற்று கடினமாகவும் இருந்தது என மாணவ மாணவிகள் தெரிவித்திருந்தனர். இதனால் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    நீட்டுக்கு செட்டாகிய மாணவர்கள்

    நீட்டுக்கு செட்டாகிய மாணவர்கள்

    அதைப்போலவே இந்த ஆண்டு நீட் தேர்ச்சி விகிதம் முதல் முறையாக 48.57 சதவீதத்தை எட்டியுள்ளது. ஆண்டு தோறும் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பெறும் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவது தமிழக மாணவர்கள் மெல்ல மெல்ல நீட் தேர்வுக்கு செட்டாகிவிட்டதையே காட்டுகிறது.

    English summary
    NEET exam result has announced today. Tamilnadu gets 48.57% pass results. Its 9.1% more than last year.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X