சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வு... பாஜக பெரும்பான்மையுடன் இருப்பதால் நினைத்ததை சாதிக்கிறது... சீமான் காட்டம்!!

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வு... பாஜக பெரும்பான்மையுடன் இருப்பதால் நினைத்ததை சாதிக்கிறது...சீமான் காட்டம்!! வடமாநில மாணவர்கள் நீட் தேர்வில் காப்பியடித்து வெற்றி பெறுகின்றனர் என தெரிகிறது. நீட் தேர்வுக்கு எதிராக கட்சிகள், அமைப்புகள் போராடி கொண்டிருக்கிறோம். ஆனால் அரசு போராடினால் பெரும் எழுச்சியை கொண்டு வரமுடியும். அதேசமயம், பா.ஜ.க. பெரும்பான்மையுடன் இருப்பதால் நினைத்ததை சாதித்து வருகின்றனர் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் சின்னபோரூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் சமூக நீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அவரது உருவ படத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

NEET Exam: Seeman criticises bjp govt at the centre

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், ''நீட் நம்மால் தடுக்க முடியும். வடமாநிலங்களில் நீட் தேர்வை மாணவர்கள் காப்பியடித்து வெற்றி பெறுகின்றனர் என்ற பேச்சு இருந்து வருகிறது.

நீட் தேர்வுக்கு எதிராக கட்சிகள், அமைப்புகள் போராடி வருகிறோம். ஆனால் அரசு போராடினால் தான் இந்த விஷயத்தில் பெரிய எழுச்சியை கொண்டு வரமுடியும். பா.ஜ.க. பெரும்பான்மையுடன் இருப்பதால் நினைத்ததை சாதித்து வருகின்றனர். தி.மு.க. நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கினால் மகிழ்ச்சிதான். ஆனால் யாரிடம் சொல்லி வாங்குவார்கள். நீட் தேர்வால் மாணவர்களை தனியார் பள்ளியில் பெற்றோர் சேர்த்து வருகின்றனர். அதற்காகத்தான் இந்த கொள்கையை அரசு எடுத்துள்ளது'' என்றார்.

நீட் விவகாரம்: நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு - இந்து மக்கள் கட்சி ஷாக்

English summary
NEET Exam: Seeman criticises bjp govt at the centre
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X