சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஸ்வரூபம் எடுக்கும் நீட் ஆள்மாறாட்டம் விவகாரம்.. வெளிநாடு தப்பியுள்ள இர்பானின் தந்தை வேலூரில் கைது

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் இர்பானின் தந்தை முகமது சஃபி கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவ சேர்க்கைக்கு நீட் எனும் தகுதி தேர்வு எழுதுவது இந்தியா முழுவதும் கட்டாயமாகும். இந்த தேர்வு கட்டாயமாக்கப்படுவதற்கு முன்னர் பிளஸ் 2 வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற்று வந்தது.

Neet impersonation :Irfans father Mohammed Safi arrested

இந்த நிலையில் தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வு தமிழகம் உள்ளிட்ட மாநில மாணவர்களுக்கு குதிரை கொம்பாக உள்ளது. வினாத்தாள் கடினமாக இருக்கிறது. அதிலும் மாநில பாடப்பிரிவில் படித்தவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்து வருகிறது.

இதனால் தங்கள் பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயார் என்பது தற்போது நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சிக்கிய மாணவர்களை பார்த்தாலே தெரிகிறது.

புலிகள் கொன்ற பிரேமதாச மகனா.. புலிகளை வீழ்த்திய கோத்தபாயவா.. ஈழத் தமிழர் வாக்குகள் யாருக்கு?புலிகள் கொன்ற பிரேமதாச மகனா.. புலிகளை வீழ்த்திய கோத்தபாயவா.. ஈழத் தமிழர் வாக்குகள் யாருக்கு?

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் கைது செய்யப்பட்டனர். அது போல் சென்னை தனியார் கல்லூரியில் படிக்கும் அபிராமி என்ற மாணவிய உள்பட சென்னையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் ஆள்மாறாட்டம் செய்ததாக வேலூரை சேர்ந்த இர்பான் என்ற மாணவர் கடந்த 6-ஆம் தேதி மொரீஷியஸ் தீவுகளுக்கு தப்பி சென்றுவிட்டுவிட்டார். கடந்த ஆண்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த இவர் ஓராண்டை முடித்துவிட்டார்.

இர்பானை தேடி வரும் நிலையில் அவரது தந்தை முகமது சஃபி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வேலூரில் கைதானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
Neet impersonation :Irfan's father Mohammed Safi arrested by CBCID police in Vellore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X