சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீட் மசோதா.. சிவி சண்முகம்- முக ஸ்டாலின் இடையே கடும்வாக்குவாதம்.. பதவி விலக தயாரா என மாறிமாறி சவால்

Google Oneindia Tamil News

Recommended Video

    Stalin on NEET | நீட் மசோதா.. சண்முகம்- ஸ்டாலின் இடையே கடும் வாக்குவாதம்- வீடியோ

    சென்னை: நீட் தேர்வு மசோதா விவகாரத்தில் சிவி சண்முகம்- முக ஸ்டாலின் இடையே இன்று சட்டசபையில் காரசாரமான விவாதம் நடந்தது. அப்போது நீட் விவகாரத்தில் தாங்கள் சொல்வது தவறு என நிரூபித்தால் பதவி விலக தயாரா என முக ஸ்டாலின் மற்றும சிவி சண்முகம் ஆகியோர் மாறி மாறி சவால் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இன்று சட்டசபையில் விவாத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் நீட் விவகாரம் குறித்து பேசுகையில், நீட் விலக்கு மசோதா குறித்து சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சட்டசபையில் தவறான தகவல் கொடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் இதற்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்..

    NEET issue: Minister cv shanmugam argued with mk stalin in assembly

    மேலும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பட்ட நீட் விலக்கு மசோதா 9 மாதங்களுக்கு முன்பே திருப்பி அனுப்பப்பட்டதாகவும், ஆனால் குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியதை தமிழக அரசு மறைத்துவிட்டது என முக ஸ்டாலின் குற்றச்சாட்டினார்.

    ஏங்க இப்படி பண்றீங்க.. வீட்டில யாரும் மதிக்கலை சார்.. மறுபடியும் ஜெயிலுக்கு போன ஞானப்பிரகாசம்!ஏங்க இப்படி பண்றீங்க.. வீட்டில யாரும் மதிக்கலை சார்.. மறுபடியும் ஜெயிலுக்கு போன ஞானப்பிரகாசம்!

    இதற்கு விளக்கம் அளித்த சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், "நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் நீட் மசோதாவை மத்திய அரசு நிறுத்திதான் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது" என்று விளக்கம் அளித்தார். மேலும் நீட் விவகாரத்தில் jதான் கூறியதில் தவறு இருப்பதை நிரூபித்தால் பதவி விலக தயார் என்று சவால் விடுத்த அமைச்சர் சண்முகம், அதேபோல் ஸ்டாலின் சொல்வதில் தவறு இருப்பதை நிரூபித்தால அவர் பதவி விலக தயாரா என்றும் கேள்வி எழுப்பினார்.

    இதையடுத்து நீட் விவகாரத்தில் அமைச்சரின் பதில் திருப்தியில்லை என கூறி திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    English summary
    Minister cv shanmugam argued with mk stalin in assembly over NEET Exemption Bill issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X