சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாணவர்கள் எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் - ஓபிஎஸ்

syn: எதிர்காலத் தூண்களாகிய மாணவச்செல்வங்களின் விபரீதமுடிவுகள் துயரத்தை தருகிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவி ஜோதி துர்காவின் தற்கொலையால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்திருப்பதாக துணைமுதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். மாணவியின் மரணத்தால் துயரமடைந்துள்ள குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், மாணவச்செல்வங்கள் மனம் தளராமல் எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த மாணவி ஜோதி துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக மாணவி தன் கைப்பட எழுதிய கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

NEET Madurai Student Suicide Deputy CM OPS condolence

அந்த கடிதத்தில் நான் செல்கிறேன் அப்பா. நான் உங்களுக்கு நிறைய விஷயங்களை சொல்ல ஆசைப்படுகிறேன். ஆனால் அதற்கு இப்போது நேரம் இல்லை. நான் உண்மையில் நன்றாக படித்தேன். ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது. நான் நீட் தேர்வில் தோல்வியடைந்துவிட்டால் அனைவரையும் அதிருப்திக்குள்ளாக்கியிருப்பேன். என்று குறிப்பிட்டுள்ளார். தற்கொலைக்கு முன்பாக மாணவி அழுது கொண்டே செல்போனில் பேசி ரெக்கார்ட் செய்து வைத்துள்ளார்.

NEET Madurai Student Suicide Deputy CM OPS condolence

நாளைய தினம் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளது பெற்றோர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மாணவியின் மரண செய்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாக துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மாணவர்கள் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 "சோர்ந்து போய் விட்டேன்".. நீட் தேர்வுக்கு தயாரான மதுரை மாணவி தற்கொலை.. பெரும் சோகம்

English summary
Deputy Chief Minister O. Panneer Selvam has said that he is shocked and saddened by the suicide of Jyoti Durga, a student studying for the NEED exam. Deputy Chief Minister O. Panneer Selvam expressed his condolences to the bereaved families of the students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X