• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நீட் தற்கொலை....சுக்குநூறாக நொறுங்கிவிட்டேன் - முதல்வர் ஸ்டாலின் வேதனை

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவ, மாணவிகளை கெஞ்சி கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பெற்றோர்களும் குழந்தைகளுக்கு அளவுக்கு மீறி அழுத்தம் தர வேண்டாம் என்றும் அவர் தனது வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஞாயிறன்று நடைபெற்றது. நீட் தேர்வு எழுதும் முன்பு மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டார். அந்த அதிர்ச்சி விலகும் முன்பாக தேர்வு எழுதிய மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

NEET : Students Suicide in TamilNadu - Chief Minister Stalin Video

மாணவி அனிதா தொடங்கி கனிமொழி வரை மாணவச் செல்வங்களின் உயிர்ப் பலிக்கு இத்துடனாவது முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று மாணவச் சமுதாயத்தையும் அவர்களின் பெற்றோரையும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமின்றி, ஒரு சகோதரனாகவும் கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

கல்வியில் சமத்துவத்தைச் சீர்குலைக்கும் நீட் தேர்வு நீக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நமது அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சவுந்தர்யா என்ற மாணவியும் உயிரிழந்து விட்டார். நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தினசரியும் தற்கொலை செய்திகள் வெளியாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் வீடியோ பதிவு

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், 'எல்லோருக்கும் வணக்கம், கடந்த 2017ஆம் ஆண்டு மாணவி அனிதா உயிரிழந்தபோது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில்தான் நான் தற்போதும் இருக்கிறேன். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சேலத்தில் தனுஷ் என்ற மாணவன் உயிரிழந்தபோதே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தேன். இந்தநிலையில், நேற்று அரியலூர் மாவட்டத்தில் கனிமொழி என்ற மாணவியும், வேலூர் மாவட்டத்தில் சவுந்தர்யா என்ற மாணவியும் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் செய்தியைக் கேட்டு நான் சுக்குநூறாக நொறுங்கிவிட்டேன். இப்படி ஒரு துயரம் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்ற அக்கறைதான் தற்போது உள்ளது. பல தலைமுறைகளாக மறுக்கப்பட்டிருந்த கல்விக் கதவு தற்போதுதான் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மூடுவதற்குதான் நீட் தேர்வு வந்துள்ளது. படிப்பதற்கு தகுதி தேவையில்லை. படித்தால் தானாக தகுதிவந்துவிடும். நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது.

மருத்துவம் படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவை சிதைக்கதான் இந்த நீட் தேர்வு உள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க இரங்கிவராமல் மத்திய அரசு கல்மனதுடன் உள்ளது. ஏ.கே.ராஜன் குழுவில் லட்சக்கணக்கானவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு வேண்டாம் என்று ஆணையம் அறிக்கைகொடுத்தது. அந்த ஆணையம் கொடுத்த அறிக்கையை அடிப்படையாக வைத்து நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக இதனை நிறைவேற்றினோம். 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலையே மருத்துவப் படிப்பில் சேரலாம் என்று மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் கருத்தை பல்வேறு மாநில அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லவிருக்கிறோம். நீட் தேர்வு இல்லாத சூழலை உருவாக்குவோம். நீட் தேர்வில் தேர்ச்சி பெறமுடியவில்லை என்று உயிரை மாய்த்துக்கொள்ளும் செய்தி வேதனை அளிக்கிறது. உங்களால் முடியாதது எதுவும் இல்லை என்ற தன்னம்பிக்கையுடன் படிக்க வேண்டும். நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்காக 104 என்ற தொலைபேசி என்று உருவாக்கியுள்ளோம்.

சமையலுக்கு 3 குழுக்கள்.. 2 நாட்களாக அணையாத அடுப்பு.. உறவினர்களால் உள்ளம் குளிர்ந்த டிடிவி தினகரன்..!சமையலுக்கு 3 குழுக்கள்.. 2 நாட்களாக அணையாத அடுப்பு.. உறவினர்களால் உள்ளம் குளிர்ந்த டிடிவி தினகரன்..!

மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல மருத்துவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். பெற்றோர்களும் குழந்தைகளுக்கு அளவுக்கு மீறி அழுத்தம் தர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

English summary
Chief Minister MK Stalin has appealed to the students who wrote the NEET exam not to take their own lives. He also posted in his video that parents should not put too much pressure on children.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X