சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்ருதிக்கு ஆதரவு.. அர்ஜூன் நல்லவரும் இல்லை கெட்டவரும் இல்லை.. நீது ஷெட்டி பரபரப்பு தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    நடிகர் அர்ஜுன் மீது கன்னட நடிகை பாலியல் புகார்- வீடியோ

    பெங்களூர்: நடிகர் அர்ஜூன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ள ஸ்ருதி ஹரிஹரனுக்கு பிரபல நடிகை நீது ஷெட்டி ஆதரவு தெரிவித்துள்ளார்.

    நடிகர் அர்ஜூன் எனது முதுகை தடவினார், அறைக்கு அழைத்தார் என நிபுணன் பட நாயகி ஸ்ருதி ஹரிஹரன் புகார் அளித்துள்ளார். இதை அர்ஜூன் மறுத்துள்ளார்.

    Neethu Shetty supports Sruthi Hariharan

    இந்நிலையில் ஸ்ருதி ஹரிஹரனுக்கு நீது ஷெட்டி ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நான் ஸ்ருதி ஹரிஹரனுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். இத்தகைய பாலியல் தொல்லைகளை யாரும் வெறும் விளம்பரத்துக்காக சொல்ல மாட்டார்கள். ஸ்ருதி ஆதரவு வழங்கியதால் நடிகர் அர்ஜூனை புறக்கணித்துவிட்டோம் என்ற அர்த்தம் இல்லை.

    நான் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். இதில் பலரது கருத்தும் ஒரு சார்பாக உள்ளது. ஸ்ருதிக்கு ஏற்பட்ட மனவலியை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக அர்ஜூனை நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் சொல்ல மாட்டேன்.

    15 ஆண்டுகளுக்கு முன்பு... 20 கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. அர்ஜூன் மீது துணை நடிகை புகார் 15 ஆண்டுகளுக்கு முன்பு... 20 கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. அர்ஜூன் மீது துணை நடிகை புகார்

    நான் சினிமாவுக்கு வந்து 14 ஆண்டுகள் ஆகின்றன. எனக்கு இத்தகைய மோசமான அனுபவங்கள் நடந்தது இல்லை. ஆனால் ஒரு சில இடங்களில் கசப்பான அனுபவம் எனக்கு நடந்துள்ளது. ஆனால் அதற்கு ஆதாரத்தை என்னால் கொடுக்க முடியாது என்றார் நீது ஷெட்டி.

    English summary
    Actress Neethu Shetty supports Sruthi Hariharan in the sexual complaint on Arjun.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X