சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Nel Jayaraman: 174 அரிய வகை நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்

Google Oneindia Tamil News

Recommended Video

    நெல் ஜெயராமன் புற்றுநோயால் காலமானார்

    சென்னை: அரிய வகை நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 50.

    திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் 174 அரிய வகை நெல் விதைகளை சேகரித்து வைத்திருந்தார். பாரம்பரிய நெல்வகைகள காப்பாற்றுவதற்காக தேசிய, மாநில விருதுகளை பெற்றுள்ளார்.

    ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல்வகைகளை பிரபலப்படுத்தினார். கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.

    நிதியுதவி

    நிதியுதவி

    இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள், திரைப்பட கலைஞர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவி செய்தனர்.

    பொதுமக்கள் அஞ்சலி

    பொதுமக்கள் அஞ்சலி

    அவருக்கு சித்ரா என்ற மனைவியும் 11 வயதில் மகனும் உள்ளனர். அவரது உடல் தேனாம்பேட்டை ரத்னா நகர் 2-ஆவது தெருவில் பொது மக்கள் அஞ்சலிக்காக காலை 8 மணி முதல் 11 மணி வரை வைக்கப்படுகிறது.

    நாளை இறுதிச் சடங்கு

    நாளை இறுதிச் சடங்கு

    பின்னர் அவரது சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு வேன் மூலம் கொண்டு செல்லப்பட்டு நாளை மதியம் 12 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இந்த தகவலை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல்

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல்

    நெல் ஜெயராமன் மறைவுக்கு குறித்து வைகோ கூறுகையில் நெல் ஜெயராமனின் மரணம் அதிர்ச்சியை அளிக்கிறது. அவரது மறைவால் விவசாயிகள் தங்கள் உற்ற பாதுகாவலனை இழந்துவிட்டனர் என்றார் வைகோ.

    English summary
    Nel Jayaraman died of Cancer in Apollo Hospital. He struggled for cancer for years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X