சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மெரீனா பீச்சில்.. தடையை மீறி அதகளம் செய்த எச். ராஜா.. கொந்தளித்த நெட்டிசன்கள்.. போலீஸ் வழக்கு

எச்.ராஜா உள்ளிட்ட 311 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழறிஞர் நெல்லை கண்ணன் கைது - வீடியோ

    சென்னை: அதெப்படி.. எச்.ராஜா மட்டும் பீச்சில் போராட்டம் நடத்தலாம் என்று சோஷியல் மீடியாவில் பலர் கேள்வி எழுப்பியபடியே இருந்த நிலையில், போராட்டம் நடத்திய, எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்ட 311 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பிரபல பட்டிமன்ற பேச்சாளர், தமிழறிஞர் நெல்லை கண்ணன்.. கடந்த 29-ந் தேதி மேலப்பாளையத்தில் ஒரு கூட்டத்தில் பேசினார்.. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பாக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.

    இந்த கூட்டம் முழுவதும் பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் முதல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் வரை கடுமையாகவும் பகிரங்கமாகவும், ஒருமையிலும் பேசினார்..

    செம கிளிக்.. மோடி எங்கே போனாலும்.. பின்னாடியே போவாரே அவர்.. ஞாபகம் இருக்கா.. அவர் இவர்தான் செம கிளிக்.. மோடி எங்கே போனாலும்.. பின்னாடியே போவாரே அவர்.. ஞாபகம் இருக்கா.. அவர் இவர்தான்

    வைரல்

    வைரல்

    மேலும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சன் கோகாய் பற்றியும் கருத்துக்களை தெரிவித்ததாக சொல்லப்பட்டது. நெல்லை கண்ணனின் இந்த ஒட்டுமொத்த பேச்சும் இணையத்தில் வைரலானது. தமிழக பாஜகவினர் கொதித்து போய்விட்டனர். அதிலும் எச்.ராஜா ஒருபடி மேல போய்விட்டார்.

    சீமான்

    சீமான்

    செக கடுப்பில் ட்வீட்களை போட்டு கண்டனங்களை பதிவு செய்தார்.. நெல்லை கண்ணன் கைது செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல.. அவர் பேச்சுக்கு ஆதரவு தந்த சீமானையும் கைது செய்ய வேண்டும் என்று காட்டமாக வலியுறுத்தினார். மேலும் பாஜகவின் கல்யாணரானின் ஃபேஸ்புக் பதிவிற்கு கைது செய்து ரிமாண்ட் செய்த போலீஸ், இப்போது, நெல்லை கண்ணன் விஷயத்தில் வெறும் வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளது நாடகமா என்ற கேள்வியையும் முன்வைத்து, பீச்சில் தர்ணாவில் உட்கார்ந்து பெரும் பரபரப்பை கிளப்பினார்.

    நெல்லை கண்ணனுக்கு ஜனவரி 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்.. நெல்லை குற்றவியல் நீதிமன்றம் அதிரடி!நெல்லை கண்ணனுக்கு ஜனவரி 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்.. நெல்லை குற்றவியல் நீதிமன்றம் அதிரடி!

    கைது

    கைது

    இந்த தர்ணாவில் பாஜக மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். ஏராளமான பாஜகவினர் பீச்சில் கூடியதால், இவர்களை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறிவிட்டார்கள். தர்ணா செய்ததால், எச்.ராஜா உள்ளிட்டோர் கைதாகினாலும், எச்.ராஜா எப்படி மெரினாவில் போராட்டம் செய்யலாம்? மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும்போது இவர் மட்டும் எப்படி தர்ணா செய்யலாம் என்று பல்வேறு தரப்பில் கேள்விகள் எழ ஆரம்பித்தது.

    வழக்கு

    வழக்கு

    இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்ட 311 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், அத்துமீறி நடந்துகொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    English summary
    nellai kannan arrest issue: Police filed case against 311 persons including h.raja and pon radhakrishanan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X