சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீமானுக்கு உள்ள தைரியம் ரஜினியிடம் இல்லையே ஏன்.. இவர்கிட்ட இல்லாத காசா.. வெளுத்து வாங்கிய உதயகுமார்

சுப உதயகுமார் ரஜினியை சரமாரி விமர்சித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "சீமான் கிட்ட உள்ள தைரியம் ஏன் ரஜினி கிட்ட இல்லை... எம்ஜிஆர் காசு கேட்டா அரசியலுக்கு வந்தார்... மக்களிடம் வந்து நிற்கவில்லையா? மக்களுக்காக வந்து போராடவில்லையா? ரஜினி அப்படி என்ன பண்ணினார்?" என்று சுப.உதயகுமார் ரஜினிகாந்த் அரசியல் குறித்து கடுமையாக விமர்சித்து பேசி உள்ளார்.

சில நாட்களாகவே ரஜினிகாந்த் பற்றின பேச்சும், அதன் பரபரப்பும் அடங்காமல் உள்ளது.. அந்த வகையில் நேற்று தன் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார் ரஜினிகாந்த்.

முழுக்க முழுக்க அவர்களுக்குள் நடந்த ஆலோசனை கூட்டம் என்றாலும் பொதுப்படையாக இந்த விவகாரம் தர்க்க ரீதியான வாதத்தை கிளப்பி வைத்து வருகிறது... ரஜினிகாந்த் நடத்திவரும் இந்த அரசியல் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 துடிக்க வேணாமா?

துடிக்க வேணாமா?

அந்த வகையில் கூடங்குளம் அணுஉலை போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயக்குமாரும் தன் கருத்தை தெரிவிக்கிறார்.. அவர் பேசும்போது, "மக்களுக்கான அரசியல் தலைவர் என்றால் முதலில் மக்களுக்காக உழைக்க வேண்டும்... மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் சதை துடிக்கும்... துடிக்கணும்.. அவருக்கு துடித்ததா? வெறுமனே நடிக்கிறார்... மொட்டையாக பேசுகிறார்... தனக்கு சாதகமாக மட்டுமே பேசுகிறார்.

 அவலம்

அவலம்

அரசுகளுக்கு ஆதரவாக மட்டுமே நிற்கிறார்... ஊடகங்கள் தன்னை வைத்து பேசுவார்கள். மக்களிடம் தன்னைப் பற்றி இவர்களே கொண்டு செல்வார்கள் என்று நம்புகிறார். மக்களின் பிரச்சினைகளை விட்டு விட்டு மக்களை ஒட்டுமொத்தமாக அவரைப் பற்றி பேச வைப்பது எவ்வளவ பெரிய அவலம்... செலவு செய்ய காசு இல்லை என்று அவர் யோசிப்பதாக சொல்வது அப்பட்டமான சுயநலம்.

 எம்ஜிஆர்

எம்ஜிஆர்

எம்ஜிஆர் காசு கேட்டா அரசியலுக்கு வந்தார்? மக்களிடம் வந்து நிற்கவில்லையா? மக்களுக்காக வந்து போராடவில்லையா? மக்களுக்கான பிரச்சினைகளில் அவர்களுடன் கைகோர்க்கவில்லையா? நாம் தமிழர் கட்சி என்ன காசு வைத்துக் கொண்டா தேர்தல்களை சந்திக்கிறது? அதுவும் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவில்லையா? அவர்களிடம் என்ன காசு கொட்டியா கிடக்கிறது? இல்லை, கோடி கோடியா சம்பாதிச்சிட்டு அதுக்கப்பறம் வந்து தேர்தலை சந்திச்சாங்களா?

 10 பைசா கையில் இல்லை

10 பைசா கையில் இல்லை

இவர் ஏன் இந்த கூட்டத்தை கூட்டணும்? இவர் அண்ணன் சத்ய நாராயணா ஏப்ரல் மாசம் ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டாரே? இதைதானே தமிழுருவி மணியனும் சொன்னார்? இப்போதைக்கு ரஜினிகாந்துக்கு வேற வேலை இருக்கிறது? அண்ணாத்தே என்ற பெரிய கம்பெனி, பெரிய பட்ஜெட் படம் பண்ண போறார்.. அதுக்கான வேலைகளில் இறங்க உள்ளார்.

 சத்யநாராயணா

சத்யநாராயணா

இவர் ஏன் இந்த கூட்டத்தை கூட்டணும்? இவர் அண்ணன் சத்ய நாராயணா ஏப்ரல் மாசம் ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டாரே? இதைதானே தமிழுருவி மணியனும் சொன்னார்? இப்போதைக்கு ரஜினிகாந்துக்கு வேற வேலை இருக்கிறது? அண்ணாத்தே என்ற பெரிய கம்பெனி, பெரிய பட்ஜெட் படம் பண்ண போறார்.. அதுக்கான வேலைகளில் இறங்க உள்ளார்.

நாடகம்

நாடகம்

ஆனால், கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக யாராவது கேட்டுவிடுவார்கள், விமர்சித்து விடுவார்கள் என்பதற்காக எதையாவது சொல்லணுமேன்னு இப்படியெல்லாம் சொல்லி வருகிறார். குறைந்தது 6 மாசத்துக்கு கட்சி ஆரம்பிப்பது சம்பந்தமான விஷயத்தை ஆறப்போடணும்.. அதுக்காக இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்று நாடகம் நடத்துகிறார்.. மத்தபடி சிஸ்டம் மாத்தணும்னு அவருக்கு எந்த கவலையுமில்லை.. அந்த படம் முடியற வரை இதை ஆஃப் செய்யணும்.. அவ்வளவுதான்.

 நல்லா தெரியும்

நல்லா தெரியும்

ரஜினி ஒரு அறிவாளி.. இவர் கட்சி தொடங்கபோறதும் இல்லை.. அதில ஜெயிக்க போறதும் இல்லை.. அவருக்கே நல்லா தெரியும், தன்னுடைய பிரம்மாண்டமான வாழ்க்கையை தோல்வியாக முடிக்க கூடாது என்பதில் ரஜினி தெளிவா இருக்கார். ஆனால் அவரை சுற்றி இருப்பவர்கள்தான் அவரை பிடித்து கொண்டு தங்களுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்காதா என அலைபாய்கிறார்கள்" என்றார்.

English summary
nellai suba udhayakumar slams rajinkanths politics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X