சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போர்வெல்லில் குழந்தைகள் சிக்கிக் கொண்டால் இப்படி மீட்கலாம்.. திண்டுக்கல் தர்மராஜ் தரும் யோசனை!

Google Oneindia Tamil News

Recommended Video

    போர்வெல்லில் குழந்தைகள் சிக்கிக் கொண்டால் இப்படி மீட்கலாம்..

    சென்னை: போர்வெல்லில் குழந்தைகள் சிக்கிக் கொண்டால் இது போன்று மீட்கலாம் என திண்டுக்கல் தர்மராஜ் ஒரு யோசனையை கூறியுள்ளார்.

    திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுஜித் தவறி விழுந்தான். அந்த குழந்தையை மீட்க தீயணைப்பு வீரர்கள், மாவட்ட நிர்வாகத்தினர், ஊர் மக்கள் என போராடி வருகின்றனர்.

    சிறுவனின் அசைவுகள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த குழந்தையை மீட்க வேண்டும் என பிரார்த்தனைகள் வலுக்கின்றன. இந்த நிலையில் போர்வெல்லில் சிக்கும் குழந்தைகளை எப்படி மீட்பது என்பது குறித்து திண்டுக்கல்லை சேர்ந்த தர்மராஜ் ஒரு யோசனை கூறியுள்ளார்.

    இந்த கருவியை முன்பே பயன்படுத்தியிருந்தால்.. இந்நேரம் சுஜித் வெளியில் வந்திருக்கலாமோ?இந்த கருவியை முன்பே பயன்படுத்தியிருந்தால்.. இந்நேரம் சுஜித் வெளியில் வந்திருக்கலாமோ?

    அதன்படி குழந்தை சிக்கியுள்ள போர்வெல்லில் ஒரு முனையில் பலூனை கட்டி பிவிசி பைப்பை அனுப்ப வேண்டும். அந்த பலூன் குழந்தையின் கால் பகுதியில் இருக்குமாறு பைப்பை செலுத்த வேண்டும். பின்னர் பைப்பின் பக்கவாட்டு பகுதியில் அதாவது நிலப்பகுதியில் ஒரு பைப்பை இணைக்க வேண்டும்.

    அந்த பைப் வழியாக ஏர் புளோயர் மூலம் காற்றடிக்க வேண்டும். அப்போது பலூனில் காற்று நிரம்பி குழந்தையை மேல் நோக்கி தள்ளும். இதன் மூலம் குழந்தையை எளிதாக மீட்கலாம் என விளக்கப்படங்களுடன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Netisan Dindigul Dharmaraj shares his idea how to save a child or toddler traps in borewell. His idea may help Sujith to save.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X