சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு இந்திய பிரஜை ஏன்ம்மா சீன பிரதமருக்கு கடிதம் எழுதணும்?. லாஜிக்கே இல்லாமல் பேசறீங்க.. நெட்டிசன்கள்

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு இந்திய பிரஜை சீன பிரதமருக்கு ஏன்ம்மா லெட்டர் எழுத வேண்டும் என காயத்ரி ரகுராமுக்கு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் கமல்ஹாசன் நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அவர் கடிதம் எழுதியிருந்ததை பாஜகவில் உள்ள நடிகை காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் தனது பதிவில், சீன அதிபருக்கும் தப்லீஜி ஜமாத் அமைப்பினருக்கும் ஏன் கடிதம் எழுதவில்லை என கேட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் சரியான பதிலடியை கொடுத்துள்ளனர்.

சித்தாந்தங்கள்

மரியாதை நிமித்தமாக கடிதம் எழுதியதில் எந்த தவறும் இல்லை. இந்திய குடிமகன் ஏன் ஜீ ஜின்பிங்கிற்கு கடிதம் எழுத வேண்டும்? இது போன்ற கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்க முடியாவிட்டால் அவர் பதவி விலக வேண்டும். உங்கள் தனிப்பட்ட கோப தாபங்கள், மாறுப்பட்ட சித்தாந்தங்களை அரசியலில் கொண்டு வருவதை ஒரு போதும் ஏற்க முடியாது என இந்த வலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வார்த்தையில் கவனம் தேவை

அறிவுடன் தான் பேசுகிறீர்களா, ஜீ ஜின்பிங்கிற்கு நாம் ஏன் கடிதம் எழுத வேண்டும்? உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் உங்கள் கட்சி தலைவரிடம் சொல்லுங்கள். பிரதமருக்கு கடிதம் எழுதுவதை தடுக்க நீங்கள் யார், அவர் நம்முடைய பிரதமர். இருவருக்கு மத்தியில் நீங்கள் யார். வார்த்தையை அளந்து பேசுங்கள் என கேட்டுள்ளார்.

கேள்வி கேட்கக் கூடாதா

முடிந்தால் அவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறவும். அதை விட்டுவிட்டு கேள்வி கேட்பதே தவறு என்று பேசாதீர்கள் என்கிறார் இந்த வலைஞர்.

பிரதமரின் பணி

சூப்பர் காயத்ரி. நான் ஒரே கேள்வி உங்களை கேட்கிறேன். இது போன்று ட்வீட் போடுவதற்கு முன்னர் குறைந்த பட்சம் அறிவுக் கூட உங்களுக்கு இருக்காதா. மோடி அரசுதான் இந்தியாவை ஆள்கிறது. மற்றவர்கள் அல்ல, முதலில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் பணியை தெரிந்து கொண்டு பேசுங்கள்.

இஎம்ஐ

இந்தியா முழுவதும் 4 மணி நேரத்தில் ஊரடங்கை அறிவித்தது யார்? மாநில அரசுக்கு நிதியை குறைந்த அளவில் ஒதுக்கியது யார்? போக்குவரத்தின்றி நடக்க வைத்தது யார்? இஎம்ஐ மட்டும் தள்ளிவைத்துவிட்டு, வட்டி சுமையை மக்கள் தலையில் சுமத்தியது யார்? மத்திய அரசு தானே. பிரதமரை கேட்காமல் யாரை கேட்பது?

English summary
Netisans blasted Gayathri Raghuram for criticising Kamal Haasan's letter to PM Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X