சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜாலியன்வாலா பாக்கில் இறந்தவர்கள் தேசபற்றாளர்கள்.. தூத்துக்குடியில் இறந்தவர்கள் தேசதுரோகிகளா?

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அப்பகுதி மக்கள் 100 நாட்களுக்கு மேல் போராடினார்கள். இந்த நிலையில் கடந்த ஆண்டு இதே நாளில் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் இறந்து இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து இன்று முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக #WeRememberTuticorinMassacre என்ற ஹேஷ்டேக் பிரபலமாகி வருகிறது.

தேச துரோகிளா

ஜாலியன்வாலாபாக்கில் ஆங்கிலேய அரசால் சுட்டு கொல்லப்பட்டவர்கள் தேசப்பற்றாளர்கள். அதேபோல் தூத்துக்குடியில் இந்திய அரசால் சுட்டு கொல்லப்பட்டவர்கள் தேச துரோகிகளா?

முகிலன் எங்கே

இன்று தூத்துக்குடி படுகொலையை நாம் நினைவில் வைத்துள்ளோம். அதே வேளையில் முகிலன் காணாமல் போய் 13 வாரங்கள் ஆனதை நாம் யாரும் மறக்கக் கூடாது. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்களுக்கு இடையே அவர் மாயமானது போல் அவர் குறித்து தகவல்களும் மாயமாகிவிட்டன.

எங்களுக்கு நீதி வேண்டும்

எங்களுக்கு நீதி வேண்டும்.

தூத்துக்குடி படுகொலை

மறக்கவும் மாட்டோம்!
மன்னிக்கவும் மாட்டோம்!
#தூத்துக்குடி படுகொலை.

சுய லாபம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட மணிராஜின் போஸ்டரை அவரது தந்தை பார்வையிடும் காட்சி. 3 மாதங்களுக்கு முன் திருமணம் ஆன மணிராஜ் இறக்கும் போது மனைவியை கர்ப்பிணியாய் விட்டு சென்ற அவலம். இந்த உயிரிழப்புகள் நடைபெற காரணமாக இருந்தது கார்பரேட் நிறுவனங்களின் லாபத்துக்காக அன்றி வேறு எதற்காக..

தூத்துக்குடியில் கருப்பு தினம்

தூத்துக்குடியின் கருப்பு தினம் இன்று...

மறக்க முடியாத குற்றம்

தூத்துக்குடி கொடுமை நடந்து ஓராண்டு ஆன நிலையிலும் மறக்க முடியாத குற்றம்.

நீதி எங்கே

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.

English summary
Netisans gives their comment on Tuticorin Massacre one year memorial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X