சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Memes: கொரோனா கட்டுக்குள் இருக்குனு சொன்னீங்களே.. அது கோயம்பேடு கீரை கட்டுனு சொல்லலையே!!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா கட்டுக்குள்ள இருக்குனு சொன்னீங்களே, அது கோயம்பேடு மார்க்கெட் கீரை கட்டுக்குள்ள இருக்குனு யாரும் சொல்லலையே என நெட்டிசன்கள் அதகளம் செய்கிறார்கள்.

Recommended Video

    Koyambedu market to be shifted to Thirumazhisai

    சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலம் 300-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியது. மேலும் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் அதிகரிக்க காரணமும் கோயம்பேடு சந்தை மூலம்தான் என அரசு தெரிவித்தது.

    இதையடுத்து அந்த சந்தையை மூட உத்தரவிடப்பட்டது. இதனிடையே கோயம்பேடு சந்தை குறித்து மீம்ஸ்கள் உலா வருகின்றன. அவற்றுள் உங்கள் பார்வைக்கு...

    கட்டு

    கட்டு

    கொரோனா கட்டுக்குள்ள இருக்கு... கட்டுக்குள்ள இருக்குன்னு சொன்னிங்களே.

    அது கோயம்பேடு மார்க்கெட் கீரை கட்டுக்குள்ளயும், கொத்தமல்லி கட்டுக்குள்ளயும் இருக்குனு யாராவது சொன்னீங்களா

    இலவசம்

    இலவசம்

    காய்கறி வாங்குனா
    கறிவேப்பிலை தான
    இலவசமா குடுப்பங்க,
    இப்ப என்ன #கொரோனா
    குடுத்து விட்டுவிட்டிங்க...

    கொத்தமல்லி

    கொத்தமல்லி

    கீரையும், கொத்தமல்லி சாப்பிட்டால் #கொரோனா காலி பண்ணிடலாம் நினைச்சா அது நம்மள காலி பண்ணிடுச்சு

    அதிபுத்திசாலி

    அதிபுத்திசாலி

    லாக்டவுன் இருக்கும் போது..

    அதிபுத்திசாலி போல...
    திட்டமிடாமல்
    அவசர அலங்கோலத்தில்
    அறிவித்த லாக்டவுன் தான்

    இன்றைக்கு நோய் பரவ முக்கியக்
    காரணமாக இருக்கிறது..

    #கோயம்பேடு
    ஆபத்தின் சின்னம் ஆனது..

    கோயம்பேடு மார்க்கெட்

    கோயம்பேடு மார்க்கெட்

    சீனாவுக்கு #ஊஹான் மீன் மார்க்கெட்...
    தமிழகத்திற்க்கு
    #கோயம்பேடு காய்கறி மார்க்கெட்...

     நோயி வாங்க

    நோயி வாங்க

    காயி வாங்கப் போனேன்..
    நோயி வாங்கி வந்தேன் என்கிறார் இந்த வலைஞர். கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பரவியதை இப்படி சொல்கிறார்.

    சும்மா அதிருதுல்ல

    சும்மா அதிருதுல்ல

    #கோயம்பேடு

    பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல என ரஜினியின் சிவாஜி பட டயலாக்கை சொல்கிறார் இந்த வலைஞர்.

    கோயம்பேடு பக்கம்

    கோயம்பேடு பக்கம்

    பஸ் ஏர்ரதுக்கு கூட இனி #கோயம்பேடு பக்கம் போக கூடாது என்கிறார் இந்த வலைஞர்.

    English summary
    Netisans shared memes on Koyambedu market saying it spreads Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X