சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டதற்கு முழு காரணமும் இவர்கள்தானாம்! #SriLanka

Google Oneindia Tamil News

சென்னை: டெல்லியின் முழு ஆதரவுடன் இலங்கையில் அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக திமுக பிரமுகர் டி ஆர் பி ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜபட்சவை சிறிசேனா பிரதமராக்கியுள்ளதால் இந்த நிகழ்வை ஒட்டுமொத்த உலக தமிழர்களும் திரும்பி பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பிரபலங்களும் நெட்டிசன்களும் கருத்துகளை பறிமாறிக் கொண்டுள்ளனர்.

இந்த அதிரடி அரசியல் மாற்றம் ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து அலசப்பட்டுள்ளது.

அரசியல் மாற்றம்

டெல்லியின் முழு ஆதரவுடன் இலங்கையில் அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

நேரில் சந்தித்த திமுக

டெல்லியின் முழு ஆதரவுடன் இலங்கையில் அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்று திமுகவின் டி ஆர் பி ராஜா கூறிய கருத்துக்கு மகிந்த ராஜபட்சவை நேரில் சென்று சந்தித்த திமுகவின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார் கஸ்தூரி.

ரணில் ராஜினாமா

சிறிசேனாவும் ராஜபட்சாவும் சீனாவின் ஆதரவாளர்கள். இந்தியர்களுக்கு எதிரான உணர்வு இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ளதை என்னால் உணரமுடிகிறது. இந்தியாவுடன் நட்புறவை வைத்திருந்த ரணில் ராஜினாமா செய்துவிட்டார்.

மறுக்கப்பட்டு விட்டது

ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபட்ச இலங்கையின் பிரதமராக வந்துள்ளார். கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுவிட்டது வெட்கத்துக்குரியது.

ஒற்றை மீம்

6.2 மில்லியன் தமிழர்களின் உணர்வுகளை இந்த ஒற்றை மீம் பிரதிபலிக்கும்.

மகிழ்ச்சி

மகிந்த ராஜபட்ச பிரதமராக பதவியேற்றதை கண்டு பாஜகவினர் மகிழ்ச்சியில் திளைப்பது ஏன்...

கவலையில்லை

பிரதமராக மகிந்த ராஜபட்ச பதவியேற்றார். இனப்படுகொலை செய்த நாட்டுக்கு ஜனநாயகம் மற்றும் தேர்தல்களை பற்றி கவலையில்லை என்பதையே இது காட்டுகிறது. வெறுப்பு அரசியலை தவிர்த்து வளர்ச்சிக்கான எதையும் ஆழமான கட்டமைப்பு அனுமதிக்காது. தமிழர்களின் எதிர்காலத்தை நினைத்து கவலையாக இருக்கிறது.

English summary
Netisans shared their comments about political change in Srilanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X