சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாக்கடையா இருந்தா என்ன பண்ணுவீங்க.. கவலைப்படாதீங்க க்ளீன் பண்ணி உங்களுக்கே குடிக்க கொடுப்போம்!

Google Oneindia Tamil News

சென்னை: நிலவில் இருக்கும் குடிநீர் சாக்கடையா இருந்தா என்ன செய்வீங்கன்னு நெட்டிசன் கேட்ட கேள்விக்கு சுத்திகரித்து உங்களுக்கே குடிக்கக் கொடுப்போம் எனசென்னை குடிநீர் வாரியம் பதில் அளித்துள்ளது.

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சந்திரயான் 2 என்ற விண்கலத்தை செலுத்தியுள்ளது. இந்த நிலையில் இஸ்ரோவை வாழ்த்திய சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம், ஒரு நகைச்சுவை கலந்த டுவீட்டையும் அனுப்பியுள்ளது.

அதில் நிலவில் தண்ணீரை கண்டறிந்தால் முதலில் யாருக்கு சொல்ல வேண்டும் என உங்களுக்கு தெரியுமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த கருத்தை வரவேற்றும் ஆதரித்தும் ஏராளமான டுவீட்டுகள் உலவுகின்றன.

சாக்கடை

நிலவில் குடிநீருக்கு பதில் சாக்கடை தண்ணீர் இருந்தால் என்ன செய்வீங்க என நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மெட்ரோ விளக்கம்

அதற்கு குடிநீர் வாரியமோ எங்களிடம் உள்ள நவீன தொழில்நுட்பம் மூலம் சுத்திகரிப்பு செய்து உங்கள் வீட்டுக்கே குடிக்க கொடுப்போம் என தெரிவித்துள்ளது.

மழை தண்ணிய

எதுக்கு பாஸ் அங்க உள்ள தண்ணியையும் எப்படி விற்கலாம்னு இப்போவே டெண்டர் போடவா? வருஷத்தில் கிடைக்கிற மழைதண்ணிய சேமிக்க வக்கில்ல இதுல.

நீராதாரத்தை காப்போம்

நாம இங்க இருக்குற water source எல்லாத்தையும் பத்திரமா காப்பாத்துவோம் சாரே.

வாழ்த்துகள்

சிறப்பான தரமான சம்பவம் வாழ்த்துக்கள் சென்னை குடிநீர் வாரியம்.

அதிகாரிக்கு பாராட்டு

அரசு அதிகாரிகள் எல்லாம் நகைச்சுவையாக பேசுவதை பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. அப்போ நிலவில் தண்ணீர் கண்டுபிடிக்கும் வரை மெட்ரோ வாட்டரே கிடைக்காது என தெரிவித்துள்ளார்.

English summary
Netisans shared their comments for Chennai Metro who asks ISRO to find water in moon and let them know.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X