சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நா வறண்டு போன நகரங்கள்.. தண்ணீருக்கான போர் தொடங்கிவிட்டது.. கவலையில் மக்கள் #தவிக்கும்தமிழ்நாடு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதை தண்ணீருக்கான இன்னொரு போராகவே நெட்டிசன்கள் பார்க்கின்றனர்.

நீரின்றி அமையாது இவ்வுலகு என்ற சொலவடைக்கேற்ப தண்ணீர் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. தங்கம், வெள்ளிக் கூட காசு கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். ஆனால் காசு கொடுத்தாலும் கிடைக்காதது புழங்குவதற்கான நீர்.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் மக்கள் தண்ணீருக்காக படும்பாட்டை நெட்டிசன்கள் கவலையுடன் தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். அவற்றில் இருந்து சில வாசகர்களுக்காக:-

போர்

தண்ணீருக்கான போர் தொடங்கிவிட்டது.

ஆற்றல்

நம்ம மக்கள் அவர்களது நேரத்தையும் ஆற்றலையும் சினிமா டிரெய்லர், நடிகர்கள், பழங்கால அரசர்கள் குறித்த விவாதங்களில் வீணடிக்கின்றனர். உண்மையில் சொல்ல போனால் தண்ணீர் பிரச்சினை குறித்து அனைவரின் கவனமும் இருக்க வேண்டும்.

தண்ணீர்

தமிழகத்தில் அதிகரித்துள்ள மக்கள்தொகையும் நீர் மேலாண்மையை முறையாக செய்யாததாலும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். வளைகுடா நாடுகளான யேமன் போன்ற நாட்டிலும் தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது. ஆனால் அனைத்து மக்களுக்கும் சமமாக தண்ணீர் கிடைக்க அந்நாட்டு அரசு செயல்படுகிறது.

மன்னியுங்கள்

தண்ணீர் இல்லாத காரணத்தினால் சாப்பாடு நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு மன்னிக்க வேண்டுகிறோம்.

வீணாகியது

மழை நீரை சேமிக்க சில நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். கடந்த முறை மழை நீர் எப்படி கடலுடன் வீணாக கலக்கிறது என்பதை பாருங்கள். அப்போது வீணாக்கியதால் இப்போது தண்ணீரின்றி நாம் தவித்து வருகிறோம்.

English summary
Netisans shared their comments for water crisis. They said it is like a war.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X