சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது பிரட், கேண்டில் வாங்கணுமா.. என்னங்கடா ஒரேடியா பயமுறுத்துறீங்க.. நெட்டிசன்கள் கலகல

Google Oneindia Tamil News

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் மழை கனமழை பெய்து வரும் நிலையில் பிரட், மெழுகுவர்த்தி வாங்கி கொள்ளுமாறு நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அடுத்த 3 நாட்களுக்கு இதே நிலைதான் நீடிக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் நெட்டிசன்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

மழை வெளுத்து வாங்குது


டிசம்பர் 1, 2015 ஊரை சுற்றி தண்ணீர் இருந்தும் குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்த நாள்.. #ChennaiFloods

இப்ப அதே நாள்ல மழை வெளுத்து வாங்குது.. டிசம்பர் மாதம் வந்தாலே கூடவே ஆபத்தும் வருது..

பாயும் மழை

சென்னை நோக்கி பாயும் மழை

ரொம்ப பயமுறுத்துறீங்க


மெழுகுவர்த்தி, பிரட், கொசுவத்திலாம் வாங்கி வச்சிக்கோடா அப்பறம் ஸ்டாக் தீர்ந்துட போகுது.

என்னங்கடா ரொம்ப பயமுறுத்துறீங்க...

சென்னை

டிசம்பரும் சென்னையும் குட் காம்பினேஷன்

கிழக்கு தாம்பரம்

மப்பேடு மாதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலானவை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. கிழக்கு தாம்பரத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

100 மில்லியன் கனஅடி நீர்

சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் ஒரே நாளில் 100 மில்லியன் கனஅடி நீர் உயர்வு.

ஆஹா. இது 3 மாசத்துக்கு பெய்ய வேண்டிய மழைனு சொல்லி நைட்டோட நைட்டா தண்ணிய ஊருக்குள்ள திறந்து விட்டுடுவாங்களே...

ஊத்து ஊத்துனு ஊத்துது

மழை ஊத்து ஊத்துனு
ஊத்திக்கிட்டருக்கு
நாம
ஆடிகிட்டு இருக்கோம்
குளிருல

English summary
Netisans shared their experiences of rain which lashes in Chennai and sub urbs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X