சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

#StopHindiImposition மொழிகளுக்கு தமிழ்தான் தாய்.. நீங்க தமிழ் கற்கலாமே?.. நெட்டிசன்கள் பளிச்

Google Oneindia Tamil News

Recommended Video

    #StopHindiImposition அமித்ஷாவிற்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளிப்பு

    சென்னை: ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் இந்தியை ஒரே மொழியாக்க வேண்டும் என்ற அமித்ஷாவின் ட்வீட்டுக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்தி தினத்தையொட்டி அமித்ஷா ஒரு டுவிட்டை வெளியிட்டார். அதில் அவர் கூறுகையில் இந்தியா பல மொழிளை கொண்ட ஒரு நாடு. இங்கு ஒவ்வொரு மொழிக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு.

    ஆனால் இந்தியாவை உலக அளவில் அடையாளப்படுத்த ஒரு மொழி வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. நாட்டை ஒரே மொழி ஒருமைப்படுத்த வேண்டும் என்றால் அது பலராலும் பேசப்படும் இந்தி மொழியாகும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ஒரே நாடு.. நாடு முழுவதும் இந்தி மட்டுமே ஒரே மொழியாக இருக்க வேண்டும்.. அமித் ஷா சர்ச்சை பேச்சு!ஒரே நாடு.. நாடு முழுவதும் இந்தி மட்டுமே ஒரே மொழியாக இருக்க வேண்டும்.. அமித் ஷா சர்ச்சை பேச்சு!

    தமிழ்தான்

    உலகிலேயே தமிழ்தான் மற்ற மொழிகளுக்கு தாய் போன்றது. நீங்கள் எல்லோரும் ஏன் தமிழ் கற்கக் கூடாது? சமஸ்கிருதத்தை விட 5000 ஆண்டுகள் பழமையான மொழி தமிழாகும்.

    கட்டமைப்பது

    உங்களுடைய இந்தி ஏகாதிபத்திய அணுகுமுறை எங்களை தினமும் கொல்கிறது. இந்தியை தவிர்த்து வேறு மொழி பேசுபவர்களை சுட்டுக் கொல்கிறது. இந்தி பேசாத நாம் ஒரே துப்பாக்கிச் சூட்டில் பலியாகிவிடுவோம். அதன் பிறகு ஒரே மொழி என்பதை வைத்து நாட்டை கட்டமைப்பது உங்கள் எளிதாகிவிடும்.

    திணிப்பது

    என்னுடைய தாய்மொழி இந்தி அல்ல. நான் இந்தியை பயன்படுத்த மாட்டேன். எனது தேசத்தின் ஒற்றுமை பன்முகத்தன்மையை நம்பியுள்ளது. ஒரே மொழியை திணிப்பதால் மட்டும் அது நடந்து விடாது.

    தடை

    இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி படங்களை தடை செய்வதிலிருந்து நாம் தொடங்குவோம்.

    பிரச்சாரம்

    இந்த நடைமுறை ஊக்குவிக்கப்படமாட்டாது. ஒரு மொழியை மற்றவர்கள் மீது திணிக்க யார் அதிகாரம் கொடுத்தது. இது பிரச்சாரம்.

    உலக அளவில்

    இந்த நபருக்கு (அமித்ஷாவுக்கு) வேற்றுமையில் ஒற்றுமை என்றால் என்னவென்றே தெரியவில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மையால் மட்டுமே உலக அளவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தி பேசுபவர்களுக்கும் அல்ல

    நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல
    இந்தி பேசும் மக்களுக்கும் எதிரானவர்கள் அல்ல
    இந்திய அரசின் இந்தி திணிப்பை மட்டுமே எதிர்க்கிறோம்

    English summary
    Netisans troll Amitshah for imposing Hindi as One nation One Language on the account of Hindi Diwas day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X