சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அகோரிகள் அதிகரிப்பால் உள்ளாடை விற்பனை டவுன்.. நிர்மலா சீதாராமனை விடாமல் கலாய்க்கும் நெட்டிசன்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆட்டோமொபைல் சரிவிற்கு நிர்மலா சீதாராமன் சொன்ன திடுக் காரணம்!

    சென்னை: ஓலா, ஊபர் ஆகிய கார்களில் பயணம் செய்யவே இளைஞர்கள் விரும்புவதால் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி அடைந்ததாக கூறிய நிர்மலா சீதாராமனை நெட்டிசன்கள் 2-ஆவது நாளாக வச்சு செய்து வருகின்றனர்.

    சென்னையில் கிண்டியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சிக்கு காரணம் குறித்து கூறியுள்ளார்.

    அதாவது லட்சக்கணக்கான இளைஞர்கள் பயணம் செய்ய ஓலா, ஊபர் ஆகிய வாகனங்களை நாடுகின்றனர். இதனால் சொந்தமாக வாகனத்தை வாங்க யாரும் முன்வராததாலேயே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து டுவிட்டரில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

    செல்பிக்கு பதில் ஸ்லோபி.. ஷாக்கிங் விலை.. கேமரா கிங்.. ஆன்ட்ராய்டை ஆட்டம் காண வைத்த ஐபோன் 11!செல்பிக்கு பதில் ஸ்லோபி.. ஷாக்கிங் விலை.. கேமரா கிங்.. ஆன்ட்ராய்டை ஆட்டம் காண வைத்த ஐபோன் 11!

    தேச விரோதிகள்

    லட்சக்கணக்கானோர் பொருளாதாரத்தை சீரழிக்கிறீர்கள். ராணுவ வீரர்கள் நாட்டுக்காக எத்தனை தியாகத்தை செய்கின்றனர். தேசத்துக்காக உங்களால் கார்களை வாங்க முடியாதா தேசவிரோதிகளே.

    நிர்மலா சீதாராமன்

    புவி ஈர்ப்பு விசையினால்தான் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு குறைவதாக அடுத்த அறிவிப்பை வெளியிடுவார் நிர்மலா சீதாராமன்.

    நாங்க காரணம் இல்லை

    ஆட்டோமொபைல் மந்தநிலைக்கு காரணம் ஓலா மற்றும் ஊபர்தான் பொறுப்பு.
    அது போல் ரியல் எஸ்டேட் தொழில் சரிவுக்கு ஓயோ அறைகள்தான் காரணம்
    உணவு உற்பத்தி குறைவுக்கு ஸ்விக்கி, ஜொமாட்டோதான் காரணம்
    ரீட்டைல் மார்க்கெட் சரிவுக்கு அமேசான், பிளிப்கார்ட்தான் காரணம்
    வங்கிகளுக்கு பேடிஎம்தான் காரணம்.
    ஆனால் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் மட்டும் எதற்கும் காரணம் அல்ல.

    தட்டுப்பாடு

    காலை வேளையில் ஆயிரக்கணக்கானோர் ஆக்ஸிஜன் எனப்படும் பிராண வாயுவை சுவாசிப்பதால் விரைவில் ஆக்ஸிஜனுக்கும் தட்டுப்பாடு ஏற்படும்.

    முகேஷ் அம்பானி

    பொருளாதாரத்தை உயர்த்த வங்கிகளை இணைப்பது நல்ல தீர்வாகாது. எனவே எனது வங்கிக் கணக்கை முகேஷ் அம்பானியின் கணக்குடன் இணைத்துவிடுங்கள்.

    உள்ளாடைகள்

    அகோரிகள் அதிகரித்துள்ளதால் உள்ளாடைகளின் விற்பனை குறைந்துள்ளது.

    பாகிஸ்தான்

    ஆட்டோமொபைல் தொழிலை சிதைக்க இந்தியாவில் ஓலா, ஊபர் வாகனங்களை இயக்குமாறு தீவிரவாதிகளை பாகிஸ்தான் அனுப்பியுள்ளது.

    பக்கோடா வியாபாரி

    ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்களில் விற்பனை மந்தகதியில் செல்வதற்கு காரணம் எல்லோர் குடும்பத்திலும் ஒரு பக்கோடா வியாபாரி இருப்பதால்தான்.

    பீட்சா

    விவசாயத் துறையில் வீழ்ச்சி ஏற்பட்டதற்கு காரணம் லட்சக்கணக்கானோர் பருப்பு, சப்பாத்திக்கு பதிலாக பீட்சா பயன்படுத்துவதே ஆகும்.

    English summary
    Netisans troll Nirmala Sitharaman for explaining why automobile industry goes down?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X