சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொள்ளாச்சி பயங்கரம்.. சமூக வலைத்தளங்களில் கொந்தளிக்கும் மக்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    பொள்ளாச்சி கொடுமைக்கு எதிராக தமிழகம் முழுக்க மாணவர்கள் போராட்டம்-வீடியோ

    சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பாக இணையதளங்களில் மக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்துவதை பார்க்க முடிகிறது.

    இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் தங்களின் ஆதங்கங்களை கொட்டித் தீர்க்கிறார்கள். பொள்ளாச்சி பயங்கரம் தொடர்பாக வெளியான வீடியோவில் பெண் கதறியழும் காட்சிகள் கல் மனதையும் கரைப்பதாக உள்ளது.

    உன்னை நம்பித்தானே வந்தேன் என பெண் சொல்வதும், பெல்ட்டால் அவர் தாக்க வைக்கப்பட்டு நிர்வாணக்கப்பட்டு வீடியோ எடுக்கப்படுவதும் என நீண்ட அந்த கொடுமை குறித்து மக்கள் கூறும் கருத்துக்களை பாருங்கள்.

     நிர்பயா முக்கியத்துவத்தை பொள்ளாச்சி பெண்களுக்கு தேசிய ஊடகங்கள் தரவில்லை.. நீதிபதிகள் கோபம் நிர்பயா முக்கியத்துவத்தை பொள்ளாச்சி பெண்களுக்கு தேசிய ஊடகங்கள் தரவில்லை.. நீதிபதிகள் கோபம்

    ஆண் பிள்ளை வளர்ப்பு

    அந்தப் பெண் கதறியழும்போதும் இவ்வளவு கேடுகெட்டு செயல்பட பொள்ளாச்சி பாலியல் பலாத்கார கும்பலுக்கு முடிகிறது எனில் எத்தனை மோசமான வளர்ப்பாக இருப்பார்கள்? ... ஆண் பிள்ளைகளை வளர்ப்பது குறித்து பேசுவது மிக மிக அவசியம்.

    ஒற்றுமை

    வாங்கடா... நம்ம ஒற்றுமைய காட்ட வேண்டிய நேரம் வந்துருச்சி! கூட்டுங்கடா மக்கள!🔥 #PunishThePollachiRapists

    பெண்களின் நம்பிக்கை

    // உன்ன நம்பி தான வந்தேன் //

    இந்த ஒரு வரிக்குள்ள எத்தனையோ அடங்கிடுச்சுல்ல. என்னைக்கும் இதச் சொல்ற நிலைமை வந்துடக்கூடாதுனுதான் பொம்பளைங்களோட உள்ளுணர்வு இயல்பாவே சந்தேகத்துடனும்; எவ்வளவு பழகிருந்தாலும் பிடிச்சிருந்தாலும் ஒருநொடில ஒட்டுறவை அத்து விடற மனதிடத்துடனும் இருக்கு.

    மனித உற்பத்தி நிறுத்தப்படும்

    ஈன்ற ஆண்மகவை தொடக்கூசும் பெண்மை காலத்தை நிச்சயம் பொள்ளாச்சி சம்பவங்கள் படைக்கும். அவலங்களை சுமக்கும் பெண்ணிடமிருந்து அதற்குள் மனித உற்பத்தியை இயற்கை நிறுத்திவிடலாம்.

    English summary
    Netizen slam Pollachi rape accused after watching cruel videos.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X